Skip to main content

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் பாட்டுக்கு நடனமாடிய பிரபுதேவா 

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
prabhudeva

 

 

 

'சார்லி சாப்ளின்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான  'சார்லி சாப்ளின் 2' படத்தை அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது. முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். மீண்டும் நடிகர் பிரபு இப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தயாரிப்பாளர் டி.சிவா முக்கிய வேடமேற்க கெளரவ வேடத்தில் வைபவ் நடிக்கிறார். இந்நிலையில் இப்படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் கேட்டபோது....

 

 

 

"இது முதல் பாகம் மாதிரியே கலகலப்பான படம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி ஜோடி முதன் முறையாக சினிமாவில் பாடிய "சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள" என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம், நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான பாட்டை அவர்களை வைத்தே சினிமாவில் பாட வைத்தோம். அவர்கள் திரைக்காக முதன் முதலாக பாடியது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் காட்சியில் பிரபுதேவா நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப் பாடிய பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது. சூப்பர் ஹிட் பாடலாக இது பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் இயக்குனர்ஷக்தி சிதம்பரம். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்!!

Published on 06/01/2019 | Edited on 06/01/2019

சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த  இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

SEEMAN

 

உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.

 

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்து எடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது.  தனக்கு நேர்மையானவன், துணிவானவன், அச்சப்படாதவன் அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.

 

எல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான் சொன்னார். ஏன் சொன்னார் அவர்தான் தமிழன்.  அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன்.

என்றார் நகைச்சுவையாக.