prabhu deva stper hero movie minman

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருபவர் பிரபு தேவா. இரண்டு முறை தேசிய விருது வாங்கியுள்ளார். நடனத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. ஆனால் சமீபகாலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் பிரபு தேவா. விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்குஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில் பிரபு தேவா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தி கோட் படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.

prabhu deva stper hero movie minman

Advertisment

இந்த நிலையில் பிரபு தேவாவிற்கு வாழ்த்து தெரிவித்து பட அறிவிப்பை அறிவித்துள்ளது ஒரு படக்குழு. மின்மேன் என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக பிரபு தேவா நடிக்கிறார். கதை மற்றும் இயக்கத்தை பிரவீன் மற்றும் சதீஷ் என்பவர்கள் கவனிக்க, வசனம் மற்றும் திரைக்கதையை மதன் கார்கி கவனிக்கிறார். வினோத் செந்தில் தயாரிக்கும் இப்படத்திற்கு கஷ்யப் இசையமைக்கிறார். அறிவிப்பு வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.