Skip to main content

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ படத்தின் பூஜை!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Prabhu Deva starrer 'Singanallur Signal' movie Pooja!

முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர்  AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், என்டர்டெயினராக உருவாகும் ‘சிங்காநல்லூர்  சிக்னல்’ படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாகத் துவங்கியது.

ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் JM ராஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, , துருதுரு பிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்ரீமன், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஷ் பேரடி, ஹரிசங்கர், நிகில் தாமஸ், அயாஸ் கான், பிரதோஷ் ஜெனிஃபர், சித்ரா லட்சுமணன், ஸ்ரீ ரஞ்சினி, அஜய் கோஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, PL தேனப்பன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். பிரபுதேவா நடிப்பில் வெளியான “மனதை திருடிவிட்டாய்” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தற்போது 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா - யுவன் சங்கர் ராஜா கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து இருக்கிறது. 

இந்நிகழ்வினில் நடிகர் பிரபுதேவா பேசியதாவது, “இங்கு நீண்ட காலம் கழித்து உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. இங்குள்ள பலரை எனக்கு பர்ஸனலாகத் தெரியும், எல்லோருடனும் படம் செய்துள்ளேன், ஸ்ரீமன் பல வருடமாக என் ஃபிரண்ட், அவருடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் பற்றி எல்லோரும் சொன்னார்கள், இந்தக் கம்பெனியில் நாலைந்து படம் செய்தால் நன்றாக இருக்கும் என வேண்டிக்கொண்டேன். மிக கச்சிதமாகத் திட்டமிடுகிறார்கள். மிக நல்ல தயாரிப்பு நிறுவனம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அலையிர கூட்டமில்ல’ - தனுஷ் எழுதிப் பாடியுள்ள ‘அடங்காத அசுரன்’

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
dhanush raayan first single released

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

ad

இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிரது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படம் ஜூனில் வெளியாகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடங்காத அசுரன்’ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். தனுஷோடு ஏ.ஆர் ரஹ்மானும் பாடியுள்ள நிலையில் பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். ஒரு திருவிழா பின்னணியில், இந்தப் பாடல் அமைந்துள்ள நிலையில் தனுஷின் கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. ‘அரை ஜானு வயித்துக்கும் அளவில்லா ஆசைக்கும் அலையிர கூட்டமில்ல, ‘நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும், நம்ம கையில இல்ல’ உள்ளிட்ட வரிகள், ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இப்படம் ஜுன் 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த தனுஷ் படப் பாடல்

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
dhanush raayan movie song update

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிரது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. 

dhanush raayan movie song update

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை மே 9 ஆம் தேதியும் ஜூன் மாதம் படம் வெளியாகவுள்ளதாகவும் அண்மையில் படக்குழு அறிவித்தது. பின்பு ‘அடங்காத அசுரன்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளதாக தெரிவித்தது. இந்த நிலையில் இப்பாடலை தனுஷ் எழுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபு தேவா இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏ.ஆர் ரஹ்மான், தனுஷ், பிரபு தேவா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இப்பாடலில் பணியாற்றியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.