Skip to main content

வீடியோ பதிவிட்டு சர்ச்சையை கிளப்பிய பூணம் பாண்டே...

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் வரும் 16 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்காக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

poonam pandey

 

 

இந்திய விமானப்படை வீரரை போன்று மேக்கப் செய்யப்பட்ட ஒருவர் இந்தியா ஜெர்சியுடன் டீ அருந்துகிறார். அப்போது இந்திய அணியின் திட்டங்கள் என்ன, எந்தெந்த வீரர்கள் களமிறங்குவார்கள் போன்ற கேள்விகள் அந்த நபரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர், "மன்னிக்க வேண்டும், என்னால் இதனை கூற முடியாது" என அபிநந்தன் கூறியது போல கூறுகிறார். அதன் பின் அந்த நபர் டீ கப்பை எடுத்துக்கொண்டு நகரும் போது அதனை ஒரு கை வாங்குகிறது. அதன் பின், கோப்பையை மீண்டும் கொண்டுவருவோம் என வருகிறது. அபிநந்தனை கேலி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட இந்த  விளம்பரம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

இந்நிலையில் இந்த விளம்பரத்திற்கு எதிராக பல தரப்பில் விமர்சனங்கள் வந்த நிலையில் ஹிந்தி சர்ச்சை நடிகை பூணம் பாண்டே வழக்கம் போல இந்த விஷயத்திற்கு பதிலடி தருகிறேன் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். பூணம் பாண்டே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவுக்கு பலரும் விமர்சித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூனம் பாண்டே மீது வழக்குப் பதிவு

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
case against poonam pandey

பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் பூனம் பாண்டே. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் எனக் கூறி சர்ச்சைக்கு ஆளானார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்த சூழலில் கடந்த 2 ஆம் தேதி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. 

மேலும் அவரது குடும்பத்தாரைப் பலரும் தொடர்பு கொண்டபோது, யாராலும் நெருங்க முடியவில்லை எனவும் செய்திகள் வெளியானது. மேலும் எங்கு இறந்தார்? எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்படவுள்ளது எனப் பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. அதோடு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்கின்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு அடுத்த நாளே பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

இதையடுத்து கடந்த 3 ஆம் தேதி பூனம் பாண்டே, தான் உயிரோடு இருப்பதாக தெரிவித்து அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். மேலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். இவரது இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது. மேலும் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பூனம் பாண்டே மீது ஃபைசான் அன்சாரி என்பவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் சாம் ஆகியோர் சொந்த விளம்பரத்துக்கு இதுபோன்று செய்து கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு விளையாடியுள்ளதாக குற்றம்சாட்டி ரூ.100 கோடி கேட்டுள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த கான்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“நான் உயிரோடு தான் இருக்கிறேன்” - வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
poonam pandey alive

பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் பூனம் பாண்டே. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் எனக் கூறி சர்ச்சைக்கு ஆளானார். தொடர்ந்து அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார். 

இந்த சூழலில் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பதிவிடப்பட்டிருந்தது. இது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரைப் பலரும் தொடர்பு கொண்ட போது, யாராலும் நெருங்க முடியவில்லை எனவும் செய்திகள் வெளியானது. மேலும் எங்கு இறந்தார்? எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்படவுள்ளது என பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது, பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. 

அதோடு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்கின்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு அடுத்த நாளே பூனம் பாண்டே கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. இதனிடையே பூனம் பாண்டேவின் முன்னாள் கணவர், சாம், “பூனம் பாண்டே இறப்பு நிச்சயமாக உண்மையாக இருக்க முடியாது. விரைவில் இது குறித்து பதிலளிக்கிறேன்” என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில், பூனம் பாண்டே உயிரோடு இருப்பதாக அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் உயிரோடு தான் இருக்கிறேன். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் நான் பாதிக்கப்படவில்லை. இந்த நோயை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், அதைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமல், ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலைவரை சென்றுள்ளனர். மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன. விமர்சன விழிப்புணர்வுடன் ஒருவரையொருவர் மேம்படுத்தி, ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம்” என்றுள்ளார்.