Skip to main content

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது ‘பொன்னியின் செல்வன் 2’

 

ponniyin selvan released today

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இரண்டாம் பாகத்தின் பாடல்கள், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. 

 

இந்த நிலையில், படக்குழு அறிவித்தபடி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பெருந்திரளான ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு செல்கின்றனர். மேலும் முதல் பாகத்திற்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் இரண்டாம் பாகத்திற்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்படவில்லை. முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது.