Skip to main content

'பொன்னியின் செல்வன்'; டீசர் குறித்து வெளியான புதிய தகவல்

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

'Ponniyin Selvan' ; New information released about Teaser

 

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளது. 

 

சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசரை தஞ்சாவூரில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சில காரணங்களால் இந்த திட்டத்தைப் படக்குழு கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் டீசர் வருகிற ஜூலை முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  

 

சார்ந்த செய்திகள்