ponniyin selvan 2 madras high court ordered ban some websites illegal publications

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை ரசித்தனர். இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தை அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 3,888 இணையதளங்களில் வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

Advertisment

இந்நிலையில், இந்த மனு நீதிபதி எஸ்.சௌந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பொன்னியின் செல்வன் 2 படத்தை சட்டவிரோதமாக 3,888 இணையதளங்களில் வெளியிடத்தடை விதித்து உத்தரவிட்டார்.