ponniyin selvan 2 aishwarya rai fans poster viral

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது. இதனால் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை ரசித்தனர். பொதுவாக தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் போஸ்டர்கள், பேனர்கள் என திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். குறிப்பாக போஸ்டரில் அவர்கள் குறிப்பிடும் வசனம் படங்களில் இருக்கும் பன்ச் வசனங்களுக்கு இணையாக இருந்து வருகிறது. இதில் பல போஸ்டர்கள் வைரலாகி பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisment

அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் ஒரு ரசிகர் அடித்திருக்கும் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில், "ஐஸ்வர்யா (நந்தினி) அக்கா... பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கையே, கடைசி ஆயுதமே, உலகின் முதல் பெண் பாண்டிய அரசியான மீனாட்சி அம்மனோட அருளாசியோட நம்மலயே சீண்டி பாத்த சோழர்கள் இனிமேல் நம்ம பக்கம் தலை வச்சு கூட படுக்க முடியாத அளவுக்கு அவிங்கள முடிச்சுறு..." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் நடிகர்களைக் குறிப்பிட்டு வசனங்களை எழுதி வருவார்கள் ரசிகர்கள். ஆனால் இந்த ரசிகர் படத்தின் கதைக்களத்தை கொண்டு வசனத்தை எழுதியுள்ளார்.