Skip to main content

“அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை”- ஜோதிகா பட இயக்குனர் விளக்கம்!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

ponmagal vanthal


ஜோதிகா நாயகியாக நடித்து, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ. ப்ரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நேற்று மே 29- ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
 


இதனிடையே இந்தப் படத்தில் மாதர் சங்கத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக இயக்குனரிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் ஜெ.ஜெ. ப்ரெட்ரிக் இதுகுறித்து விளக்கமளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம். இந்தத் திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களிலிருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஜோதிகாவையும் கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது; ஏனென்றால்...." - ராகவா லாரன்ஸ் விளக்கம்!

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

ragava lawrence speech at chandramukhi 2 press meet

 

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பி.வாசு, லாரன்ஸ், கங்கனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது ராகவா லாரன்ஸ் பேசுகையில், "சந்திரமுகி 2வில் நடித்தது எனக்கு மிகப் பெரிய பெருமை. ஏனென்றால் ரஜினி சார் நடித்த படத்தில், நான் நடித்திருப்பது. சந்திரமுகி படத்தை அவரது ரசிகனாக தியேட்டருக்குப் போய் என்ஜாய் பண்ணினேன். இப்போது அதன் பார்ட் 2வில் நடிக்க, வாய்ப்பு கொடுத்த வாசு சார் மற்றும் லைகா நிறுவனத்துக்கும் நன்றி. அதே போல் என்னுடைய தலைவர், குரு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

கங்கனா இப்படத்தில் நடித்தது மிகப் பெரிய ப்ளஸ். தேசிய விருதுகளை வாங்கியவர். அவருடன் பணியாற்றியது ரொம்ப மகிழ்ச்சி. ஜோதிகா மாதிரி கங்கனா நடித்துள்ளார்களா என என்னிடம் நிறைய பேர் கேக்குறாங்க. ஜோதிகாவையும் கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது. ஜோதிகா தன்னை சந்திரமுகியாக நினைச்சு, சந்திரமுகி எப்படியிருப்பங்களோ அப்படி நடிச்சு காமிச்சாங்க. ஆனால் இந்த படத்தின் ஒரிஜினல் சந்திரமுகியாக கங்கனா வராங்க. அவங்க இந்த கதாபாத்திரத்துக்கு எவ்ளோ உழைப்பை கொடுக்க முடியுமோ அதை கொடுத்திருக்காங்க" என்றார். 

 

 

Next Story

சர்ச்சையில் சிக்கிய 'ஜெய் பீம்'... 5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்கம் நோட்டீஸ்

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

Vanniyar Sangam  notice to surya in jai bhim movie

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி மக்களை சித்திரவதைப்படுத்தும் காவல்துறை அதிகாரி குருமூர்த்தி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஒரு காட்சியில் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் காலண்டர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களை எழுப்பினர். அதன் பின் ‘ஜெய் பீம்’ படத்தின் காட்சியில் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், ‘ஜெய் பீம்’ படம் குறித்து நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கொண்ட கடிதம் எழுதினார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.

 

ad

 

இந்நிலையில், ‘ஜெய் பீம்’ படம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம்" என கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.