pon radhakrishnan meets rajini in kanniyakumari

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

Advertisment

இப்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரத்தில் சமீபத்தில் தொடங்கியது. அங்கு அவரைப் பார்க்க ரசிகர்கள் படப்பிடிப்பு பகுதிகளில் கூடிவிட்டனர். பின்பு ரஜினியைக் காரில் கண்டதும் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். பின்பு திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் கெட்டப்புடன் 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்துள்ளேன் என ரஜினிபேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

Advertisment

இந்த நிலையில் இப்படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்துவருவதாகதெரிகிறது. ரஜினியை பாஜக-வை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் சந்தித்துள்ளார். மரியாதைநிமித்தமாக ரஜினியை சந்தித்துள்ளதாக பொன். ராதாகிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.