Skip to main content

வலுக்கும் எதிர்ப்பு; ரகுல் ப்ரீத் சிங் படத்திற்கு குவியும் புகார்கள்

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

police complaint againest rakul preet singh thank god movie

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள அயலான் படத்தில் நடித்து முடித்துள்ள ரகுல் ப்ரீத்  சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இந்தியில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தேங் காட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதனையொட்டி படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

இந்த ட்ரைலரை பார்க்கையில் கதாநாயகன் இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கிறார். பின்பு அங்கு நடக்கும் நிகழ்வுகளை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது. அந்த சொர்க்கத்தில் அஜய் தேவ்கன் சித்திர குப்தன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது போல் பார்க்கமுடிகிறது. மேலும் ட்ரைலரின் கடைசியில் அஜய் தேவ்கன் நகைச்சுவை சொல்கிறேன் என்று சொல்லி ஒரு வசனம் பேசுகிறார். அந்த வசனம் தொடர்பாக உ.பி மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், அஜய் தேவ்கன் பேசும் வசனத்தில் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதாக வழக்குத் தொடுத்திருந்தார். 

 

இந்நிலையில் தேங்  காட் படத்திற்கு எதிராக ராஜஸ்தானில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சித்திரகுப்தனின் வழித்தோன்றல்கள் எனக் கூறப்படும் காயஸ்தர் சமூகத்தினர் தேங் காட் படத்திற்கு எதிராக நக்கலஞ்ச்சு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் சித்திரகுப்தனுக்கு  கோட் சூட் அணிவித்து, அவரின் முன்னிலையில் அரைகுறை ஆடையுடன் பெண் நிற்கும் காட்சி மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்றும்,  ஆட்சேபனைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

அஜய் தேவ்கன் பட ரிலீஸ் அப்டேட்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
ajay devgn maidaan release update

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கடைசியாக கைதி பட இந்தி ரீமெக்கில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிங்கம் அகெய்ன், ரெய்டு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஷைத்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மாதவன், ஜோதிகா உள்ளிட்டோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனிடையே மைதான் என்ற தலைப்பில் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ளார். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.