Skip to main content

சர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்! 

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

pitha


'சவரக்கத்தி' படத்தில் இயக்குனராக அறிமுகமான ஆதித்யா தற்போது 'பிதா' என்னும் படத்தை இயக்குகிறார். இதில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தயாரிப்பாளர் மதியழகன். 


மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் 'பிதா' படம், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் த்ரில்லர் வகைப்படமாகும். காணாமல் போன தன் மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாகத் தேடும் ஒரு தந்தையின் வலியைப் பதிவு செய்யும் படமாக இது உருவாவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 


கடந்த 6ஆம் தேதி இப்படத்திற்கான துவக்க விழா பூஜை நடைபெற்றது. 'பிதா' படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு கொண்டனர். மதியழகனைத் தவிர கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதா ரவி ஆகியோருடன் வேறு சில முக்கிய நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர். 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரசன்ன குமார் 'பிதா' படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.


இந்நிலையில் இப்படத்தை மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவே அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல போஸ்டரிலும் இந்த மூன்று நிறுவனங்களின் லோகோகளும் இடம்பெற்றிருந்தது. 


இந்நிலையில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்கள் நிறுவனத்தின் லோகோவை ஸ்ரீகிரீன் நிறுவனம் தயாரிக்கும் 'பிதா' என்ற படத்தின் போஸ்டரில் பார்த்தோம். அந்தப் படத்துக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆகையால், இனிமேல் எங்களுடைய நிறுவனத்தின் பெயரையோ, லோகோவையோ போஸ்டரில் உபயோகிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி; பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Vijay Sethupathi directed by Mishkin; First look release

 

தமிழ் சினிமாவில் நாயகனாக ஆரம்பித்து இந்தி, தெலுங்கு சினிமாக்களில் வில்லனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாகத் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். மெரி கிறிஸ்துமஸ், விடுதலை இரண்டாம் பாகம் ஆகியவை ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

 

இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘டிரெயின்’ (Train) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி, தன்னுடைய வித்தியாசமான இயக்கத்தால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் மிஷ்கின். இவர்கள் இணைந்து ஒரு படம் உருவாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 

 

Next Story

மிரட்டும் லுக்கில் ஆண்ட்ரியா ; 'பிசாசு 2' டீசர் வெளியீடு

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

Andrea in an intimidating look; 'Pisasu 2' Teaser Released

 

தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மிஷ்கின் . இவர் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை இயக்கிமுடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

இந்நிலையில் 'பிசாசு 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கமான மிஷ்கின் பட பாணியில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளிவந்துள்ள இந்த டீரில் வசனம் எதுவும் இடம்பெறவில்லை. ஆண்ட்ரியாவின் ஸ்கிரின் ப்ரசன்ஸ் பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.