தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நிதினுக்கு கடந்த மாதம் 26ஆம் தேதிதிருமணம் நடைபெற்றுது.
நடிகர் நிதினின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக துபாயில் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ஹைதராபாத்அரண்மனையில் நடைபெற்றது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில்நடைபெற்றஇந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்களில் சிலருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த திருமணத்தில் கலந்து கொண்ட மணமக்கள் உள்ளிட்ட மற்ற எல்லோருக்கும் கரோனா சோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.