Skip to main content

ஆந்திரா தேர்தல்...நடிகர் பவர்ஸ்டார் பவன் கல்யானுக்கு இந்த நிலைமையா...? 

Published on 23/05/2019 | Edited on 23/05/2019
pawan kalyan

 

 

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 16 இடங்களில் வென்ற தெலுங்குதேசம் இந்த முறை ஒரு தொகுதியில் கூட முன்னிலைப் பெறவில்லை. அதுபோல சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில்  ஆட்சி அமைக்க 88 தொகுதிகள் தேவை. ஆனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 175 ல் 144 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. எனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சியமைக்க உள்ளது. மேலும் இதில் கஜூவாகா தொகுதியில் போட்டியிட்ட ஜன சேனா கட்சி தலைவர் நடிகர் பவர்ஸ்டார் பவன் கல்யாண் இதுவரை 50000 வாக்குகளுக்கு மேல் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

டீசர் சர்ச்சை; பவன் கல்யாண் படக்குழுவினருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்?

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Pawan Kalyan's film crew Election Commission notice

ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில், ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. ஸ்ரீலீலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் நவீன் ஏர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தி்ன் டீசர் கடந்த 19ஆம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் இந்த டீசர் மூலம் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது. 

அதாவது, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கவுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த தேர்தலில், அரசியல் கட்சித் தலைவரான பவன் கல்யாண், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கவுள்ளார். 

இந்த நிலையில், பவன் கல்யாண் நடித்திருக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில், ஒரு காட்சியில் ‘டீ கிளாஸ் ஒன்று குளோசப்பில் காட்டப்படுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாணி ஜனசேனா கட்சியின் சின்னமான டீ கிளாஸை டீசரில் காட்டியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, பவன் கல்யாண் தனது கட்சி சின்னத்தை டீசரில் காட்டியிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரா தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார், “நான் டீசரை பார்க்கவில்லை. எனவே, நான் அதில் கருத்து கூற முடியாது. ஆனால் விளம்பரத்திற்காக டீ கிளாஸை உயர்த்தி காட்டினால் அது அரசியல் விளம்பரமாகவே கருதப்படும். இப்படி அரசியல் விளம்பரங்கள் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும், அத்தகைய விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம். அரசியல் விளம்பரம் என்றால் அந்த படக்குழுவினருக்கு நோட்டீஸ் கொடுப்போம். அவர்கள் முன்சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

திரையரங்கில் அடிதடி - தொண்டர்களால் பரபரப்பு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
yatra 2 fans fight between jegam mogan reddy pawan kalyan

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'யாத்ரா 2' என எடுக்கப்பட்டுள்ளது.  ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துளளார். இப்படம் இன்று வெளியான நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள் திரையரங்கிற்கு வந்து மேள தாளத்துடன், வெடி வெடித்துக் கொண்டாடினர்.  

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில், படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்களுக்கும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ படம் கடந்த 7 ஆம் தேதி ரீ ரிலீஸாகியுள்ளது. இந்த சூழலில் இந்த தொண்டர்களின் அடிதடி சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சம்வவம் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.