Skip to main content

ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

pathu thala first look release date

 

சிம்புவின் அடுத்தபடம் குறித்த புதிய அப்டேட்டை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் பெருமளவு நிறைவடைந்த நிலையில், சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த மாத இறுதியில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. 'பத்து தல' எனப் பெயரிடப்பட்டுள்ள சிம்புவின் அடுத்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பதாகவும், இதில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.  இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தற்போது 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.
 

Next Story

மீண்டும் முன்னணி நடிகர் படத்தில் மஞ்சு வாரியர்

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

manju warrier joins arya mr x movie

 

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் எக்ஸ் (Mr.X). இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க விஷ்ணு விஷாலை வைத்து எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்குகிறார். திபு நிபுணன் தாமஸ் என்பவர் இசையமைக்கிறார். 

 

இந்நிலையில் இப்படத்தில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் அசுரன் படத்தில் அறிமுகமான மஞ்சு வாரியர் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த 2 படங்களை அடுத்து மிஸ்டர் எக்ஸ் படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகும் நிலையில் இன்று பூஜை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தமிழ், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

கௌதம் கார்த்திக் கடைசியாக 'ஆகஸ்ட் 16 1947' படத்தில் நடித்திருந்தார். ஆர்யா 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் கலவையான விமர்சனத்தையே பெற்றன.