Skip to main content

“மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்துவிட்டால்...” - திமுக எம்.பி-க்கு நடிகர் பார்த்திபன் பதிலடி!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

parthiban senthil


இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு, மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி கடந்த வருடத்திற்கான விருது பட்டியலில் இரண்டு தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளன.

 

இதில் பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' படத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. இந்தப் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் ஒட்டுமொத்தப் படத்திலும் இருப்பதுபோன்ற திரைக்கதையை அமைத்திருந்தார் பார்த்திபன். படம் வெளியானபோதே இந்தப் படத்தின் புதுமை பலரையும் கவர்ந்தது. 

 

இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படத்தில் 'ஒத்த செருப்பு' படம் தேர்வாகவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், தற்போது மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தேர்வாகி உள்ளது. 

 

இதன்பின், தி.மு.க தர்மபுரி எம்.பி செந்தில்குமார், பார்திபனுக்கு கொடுக்கப்பட்ட இந்த விருது குறித்து ட்விட்டரில், “அண்ணனுக்கு பாஜகல ஒரு சீட் பார்சல்ல்ல்...” என்று தெரிவித்தார். 

 

இதனால் கோபமடைந்த பார்த்திபன் வரிசையாக ட்வீட் மழைகளால் தி.மு.க எம்.பி செந்தில்குமாருக்குப் பதிலடி கொடுத்தார். 

 

“ ‘இரவின் நிழல்’ என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர, வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை! நாளையே மழை வரலாம், வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை! (மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாகக் கற்பனை செய்யவேண்டாம். அது ஒரு கொக்கி வார்த்தை - மேலும் படிக்க) பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு Dr.S.செந்தில்குமார் அவர்கள் “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்”என்று sweet-ஆக tweet-ட்டி wit-டிருக்கிறார்.

 

செகு அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது comment box-ல் நிரம்பி வழிகிறது வசவுகள்! தொகுதி மேம்பாட்டுக்குப் பயன்படும் நேரத்தில் கீழ்த்தரமான comment போட்டதால், நெட்டிசன்கள் மீம்போட்டு மேம்பாட்டுப் பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை. அதிலொன்று ‘MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம். நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது (sorry for that). அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம்.

 

cnc

 

திரித்துப் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. இவன் ‘படத்தில் “seat குடுத்தா நிப்பீங்களா?” என என்னிடம் கேட்க, “Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’ என இன்றுவரை joke-க்கி விட்டுமட்டும் நகர்கிறேன். சினிமாவில் இன்னுங் கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை. எதிலும் சேர்வதில்லை. மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு. ஆனால், அதற்குப் பெயர்தான் அரசியலா? என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்! உரியது கிடைக்காதபோது ஆனந்த’மாய் தூக்கி எறிந்துவிட்டு மேடை இறங்குவேனேத் தவிர, அதைத் “தா” இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்! அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதைப் பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!!” என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சமூக நீதிக்கு சவக்குழியை தோண்டும் கட்சி தான் பா.ஜ.க.” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
CM MK Stalin campaigned in Thadangam village of Dharmapuri 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி தடங்கம் கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்து விடாமல் தடுக்க ஜனநாயக சத்திகளும் நாட்டு மக்களும் களம் கண்டுள்ள போர் இது. நாம் நடத்தும் இரண்டாவது விடுதலை போராட்டத்திற்கான கட்டியம் கூறும் தேர்தல் இது. பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழிப்பதை தடுக்க தான் ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டுள்ளன. ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும், எதிர்கால சந்ததியினரை காக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது நடக்க இருப்பது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் ஆகும்.

சமூக நீதிக்கு சவக்குழியை தோண்டும் கட்சி தான் பா.ஜ.க.. சமூக நீதி, சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய கட்சிதான் பா.ஜ.க. சமூக நீதியை பாதுகாக்க வேண்டும், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும், பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டின் தேசியக் கொடி கம்பீரமாக செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால் பா.ஜ.க. வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

சமூக நீதி பேசும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. மக்களுக்கும் பா.ம.க.வினருக்கும் அதற்கான காரணம் நன்றாகவே தெரியும். பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்ததை அக்கட்சியினராலேயே ஜீரணிக்க முடியவில்லை. வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக தி.மு.க. போராடியது. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு” எனப் பேசினார். 

Next Story

“அப்போவும் நடந்திருக்கு. இப்பவும் நடக்குது” - தேவயானி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
devaiyani speech azhagi re release press meet

தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோரது நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான படம் அழகி. உதய கீதா தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அதிக நாள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்து 2004ஆம் ஆண்டு டிலீஸ் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இப்படம் 22 வருடம் கழித்து இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதையொட்டி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தேவயானி, “22 வருஷம் கழித்து எங்க படம் ரிலீஸாவது ரொம்ப சந்தோஷமான தருணம். இது ஒரு அதிசயம். இது நடக்கும் என நினைத்ததே கிடையாது. ஆனால் ஏதோ ஒரு மேஜிக் நடந்துக்கிட்டு இருக்கு. அப்போவும் நடந்திருக்கு. இப்பவும் நடக்குது. இதை நாம் கொண்டாட வேண்டும். 

இதே போல் அழகான படங்களை ரீ ரிலீஸ் செய்து இந்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் ஏதாவது அவுங்க கற்றுக் கொள்ள முடியும். தங்கர் பச்சானுடன் நிறைய படங்களில் பணியாற்றியுள்ளேன். அவருக்கு நன்றி” என்றார்.