Skip to main content

“நான் நலமாக இருக்கிறேன்” - பரவை முனியம்மா

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

பிரபல நாட்டுப்புற பாடகரும், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவருமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததன்  காரணமாக தற்போது வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு  தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. 
 

paravai muniyamma

 

 

இன்று மதியளவில் பரவை முனியம்மா உடல்நிலை மோசமாகி உயிரிழந்துவிட்டார் என்று வதந்தி பரவியது. இதனையடுத்து பரவை முனியம்மாவும் அவரது மகளும் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டு தன்னுடைய நலம் குறித்து கூறினார். அதில் பேசிய பரவை முனியம்மா, “நான் நல்லா இருக்கிறேன். இங்க மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க. ரத்தம் ஏத்திக்கிட்டு இருக்காங்க. நல்லா இருக்கிறேன்" எனக் கூறுகிறார்.

பின்னர் பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து வேலம்மாள் மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “பரவை முனியம்மா அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தற்போது வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்களால் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை மூலம் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளார்.அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகமே ஏற்று சிகிச்சை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகாலை 2 மணியளவில் பரவை முனியம்மா வீட்டில் இருந்து ஒரு போன்... பேரனின் கண்ணீர் குரல்!

Published on 03/04/2020 | Edited on 03/04/2020


நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் பாழும் நாகரிகம் ஓடி வந்து கெடுக்கும்'- என்று மேடைகளில் ஒலித்த அந்த கிராமத்துக் குரலை மறக்க முடியாது. மதுரை அருகேயுள்ள பரவையைச் சேர்ந்த முனியம்மாவின் நாடோடிப் பாடல்கள் கருத்தும் இனிமையும் நிறைந்தவை. நாட்டுப்புறக் கலைகளை வெகுஜன இயக்கமாக மாற்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்க மேடைகளில் பரவை முனியம்மா வலம் வரத் தொடங்கியபிறகு, திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தன.

"தூள்' திரைப்படம் மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் அறிமுகமான பரவை முனியம்மாவின், "சிங்கம் போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி' பாட்டு எட்டுத்திக்கும் ஒலித்தது. இன்று மீம்ஸ்கள் வரை கலக்கும் பரவை முனியம்மா கடந்த சில நாட்களாகவே உடல்நலன் குன்றியிருந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தியிருக்கும் வேளையில், பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார்.

 

singer



இதற்கு முன்னர், பரவை முனியம்மா உடல் நலிவுற்று மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, நடிகர் அபிசரவணன் ஒரு பேரனைப் போல் கவனித்துக்கொண்டார். மார்ச் 29-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு, சென்னையில் இருந்த நடிகர் அபிசரவணனுக்கு தகவல் கிடைத்தவுடன், மோட்டார் பைக்கிலேயே மதுரைக்கு கிளம்பி, பரவை முனியம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இறுதி காரியங்களிலும் பங்கேற்றார்.

பரவை முனியம்மா மறைவு குறித்து தனது முகநூல் பக்கத்தில் அபிசரவணன் பதிவிட்டுள்ளார்.

‘அதிகாலை 2 மணியளவில் பரவை முனியம்மா வீட்டில் இருந்து ஒரு போன். இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது, பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக தகவல் வந்தது.

உடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. அதிர்ந்துபோனேன்.. உடைந்து போனேன்.. அப்பத்தாவின் இறுதி மூச்சு பிரிந்ததை அறிந்து இறுக்கத்துடன் கிளம்பினேன் .

ஒரு மாலை கூட வழியில் வாங்க இயலாத கையாலாகாதப் பேரனாய் பரவை முனியம்மா பாட்டியைப் பார்க்கச் சென்றேன். வழியெங்கும் அவரது நினைவுகள்.. "அபி அபி' என்று அழைத்த அந்த ஆறுதலான வார்த்தைகள்..அன்பான சிரிப்பு.. இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனையில் வைத்திருந்த போது கூட, அபி தைரியமாக கோர்ட்டுக்குச் சென்று வா. அப்பாத்தா நான் இருக்கிறேன். எதுவானாலும் பார்க்கலாம்.எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் அளித்தார்.இன்று அவர் உயிரோடு இல்லை.இடுகாடு வரை இறுதி ஊர்வலம்.. இறுதி மரியாதை..இன்றுடன் எல்லாமே முடிந்தது. என உருக்கமான வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்.

 

Next Story

‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

 

 

கரோனா பரவலைத் தடுப்பதற்காக தேசம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியிருக்கும் வேளையில், பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். 
 

இதற்கு முன்னர், பரவை முனியம்மா உடல் நலிவுற்று மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, இந்த அபிசரவணன் ஒரு பேரனைப் போல் கவனித்துக்கொண்டார். 29-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு, சென்னையில் இருந்த நடிகர் அபிசரவணனுக்கு தகவல் கிடைத்தவுடன், மோட்டார் பைக்கிலேயே மதுரைக்கு கிளம்பி, பரவை முனியம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இறுதி காரியங்களிலும் பங்கேற்றார். 




பரவை முனியம்மா மறைவு குறித்து தனது முகநூல் பக்கத்தில் அபிசரவணன் பதிவிட்டுள்ளார். 
 

‘இன்று அதிகாலை 2 மணியளவில் பரவை முனியம்மா வீட்டில் இருந்து ஒரு போன். இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது,  பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக தகவல் வந்தது. 
 

உடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. அதிர்ந்துபோனேன்.. உடைந்து போனேன்.. அப்பத்தாவின் இறுதி மூச்சு பிரிந்ததை அறிந்து இறுக்கத்துடன் கிளம்பினேன் .
 

ஒரு மாலை கூட வழியில் வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்  பரவை முனியம்மா பாட்டியை பார்க்கச்  சென்றேன். 
 

வழியெங்கும் அவரது  நினைவுகள்.. அபி அபி என்று அழைத்த  அந்த ஆறுதலான வார்த்தைகள்..  அன்பான சிரிப்பு..   இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனையில்  வைத்திருந்த போது கூட,  அபி தைரியமாக கோர்ட்டுக்குச் சென்று வா.  அப்பாத்தா நான் இருக்கிறேன்.  எதுவானாலும் பார்க்கலாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் அளித்தார். இன்று  அவர் உயிரோடு இல்லை. 
 

இடுகாடு வரை இறுதி ஊர்வலம்..  இறுதி மரியாதை..  இன்றுடன் எல்லாமே முடிந்தது.
 

-கண்ணீருடன் பேரன் அபி சரவணன்.’
 

உருக்கமான வார்த்தைகளில் தனது சோகத்தை இவ்வாறு  வெளிப்படுத்தியிருக்கிறார், அபிசரவணன்.