scs

Advertisment

Advertisment

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் 'மேதாவி'. பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் 'ஆக்சன் கிங்'அர்ஜூன் –ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, 'மேதாவி'படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் ஃபெப்சி தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணியிடம் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்காக 5 கிலோ அரிசி 25,000 மூட்டைகளை (1,25,000 கிலோ) இன்று வழங்கியுள்ளார். யூடியூப் புகழ் சாரா, 'கைதி'படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் மற்றும் படப்பிடிப்பு தொடங்கப்படும் தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குனர் பா.விஜய் கூறியுள்ளார்.