Skip to main content

தமிழ் சினிமாவில் மேஜிக்கல் ரியலிஸம்... எதிர்பார்ப்பை எகிற வைத்த பா.ரஞ்சித் டீம்! 

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

kuthiraivaal

 

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில், வெளியான 'பரியேறும் பெருமாள்', 'குண்டு' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. 

 

இப்படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து தயாரிப்புப் பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் கலையரசன், அஞ்சலிப்பாட்டில் நடித்த 'குதிரைவால்' என்கிற படத்தை வெளியிடுவதாக நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. 

 

'குதிரைவால்' படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது. மேஜிக்கல் ரியலிஸம் என்று சொல்லப்படும் ஜானரில் எடுத்திருப்பதாக படக்குழு தெரிவித்தது. இது தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதிது என்று சொல்லலாம். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் இயக்கியிருக்கிறார்கள், ராஜேஷ் எழுதியிருக்கிறார்.

 

உளவியல், ஆழ் மனக் கற்பனைகள் மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும், மேஜிக்கல் ரியலிச சினிமாவாகவும் இந்தப் படம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே ஒரு புதிய முயற்சியாக, இப்படம் உருவாக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யாழி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சுந்தரேசன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.

Next Story

4 பெண் இயக்குநர்களின் ஆந்தாலஜி; இயக்குநர் பா. ரஞ்சித் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 4 An Anthology of Women Directors; Director pa Ranjith First Look Released

 

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். திரைப்படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாகத் திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் நான்கு பெண்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

 

பெண்களின் மாறுபட்ட கதைகளைக் கொண்டாட, நான்கு பெண் இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்திற்கு ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  இதன் இயக்குநர்களாக அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகியோர் உள்ளனர். மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.