Skip to main content

பா.ரஞ்சித் - ஆர்யா படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

sarpatta

 

 

பா.ரஞ்சித் - ஆர்யா பட பர்ஸ்ட் லுக்  குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கபாலி, காலா படத்திற்கு பிறகு பா.ரஞ்சித், ஆர்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படம், வடசென்னை குத்துச்சண்டை வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இது  1980களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்ட படம்  என தகவல்கள் தெரிவிக்கின்றன

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்  விரைவில் வெளியாகும் என தீபாவளிக்கு முன்பே, ஆர்யா கூறியிருந்தார். அதனைத்தொடர்ந்து, ஆர்யாவின் 30-தாவது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பெயர் மற்றும்  பர்ஸ்ட் லுக், டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டிருந்தது.

 

இந்தநிலையில் இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு சார்பட்டா பரம்பரை என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில், ரோசமான ஆங்கில குத்துச்சண்டை என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. படத்தின் பெயரை வெளியிட்டுள்ள  பா. ரஞ்சித், "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல, இது நம்ப ஆட்டம்... எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்... ஏறி ஆடு.. கபிலா" என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்