கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான ‘எங்க ஊர் ராஜா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி. இதன்பின் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

Advertisment

nanjil nalini

இவர் தன்னுடைய 12 வயதில் திருநெல்வேலியிலுள்ள நாடக கம்பேனியில் சேர்ந்து நடிக்க தொடங்கியுள்ளார். சினிமாவில் ஒரு கட்டத்தில் இவருக்கு வாய்ப்புக் குறைந்தவுடன் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.

Advertisment

1978-இல் தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது. இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் 74 வயதில் பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார். இவருடைய இறப்பிற்கு, “அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு உற்றார் உறவினர் துக்கத்திலும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்” என்று இரங்கல் தெரிவித்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.

Advertisment