/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/453_14.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2010 ஆம் ஆண்டுகெளதம்மேனன்இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார். ஆனால் இப்படத்தின் தெலுங்குரீமேக்கான'ஏ மாயாசேசாவா' படத்தில் கதாநாயகியாக நடித்து திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார். பின்பு தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனிடையே நாகசைதன்யாவுக்கும்சமந்தாவிற்கும் காதல்ஏற்பட்டுகடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் விவகாரத்தைஅறிவித்துபிரிந்தனர்.அதனைத்தொடர்ந்து தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.
இந்நிலையில் சமந்தா, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒருஜக்கியின்நிகழ்ச்சியில் பங்கேற்றுஜக்கியுடன்கலந்துரையாடியுள்ளார்அப்போதுஜக்கியிடம்'ஒரு சிலருக்கு வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது'எனக்கேள்வி கேட்டார். அதற்குஜக்கி, இந்த உலகம் உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டுமா, இந்த உலகம் எப்போதும் நியாயத்துடன் இருக்காது. இதனை தற்போது நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன் என்று பதிலளித்தார். மேலும், இந்த கேள்வி ஒரு குழந்தையின் கேள்வி போல் உள்ளது என்றுஜக்கிதெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)