அஷிமா சிப்பர் இயக்கத்தில் ராணி முகர்ஜி நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'மிஸஸ் சாட்டர்ஜி Vs நார்வே'. ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் இன்று (17.03.2023) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் ஒரு தம்பதி வேலைக்காகத் தனது இரண்டு குழந்தைகளுடன் நார்வே நாட்டிற்குச் செல்கின்றனர். அங்கு அவர்களின் இரண்டு குழந்தைகள் சரியாக வளர்க்கப்படவில்லை எனக் கூறி அங்குள்ள ஒரு குழந்தைகள் அமைப்பு எடுத்துச் சென்று விடுகிறது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கான நார்வே தூதர் ஹான்ஸ் ஜேக்கப் ஃப்ரைடன்லண்ட் (Hans Jacob Frydenlund), இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில் "இப்படம் குடும்ப வாழ்க்கையில் நார்வேயின் நம்பிக்கையையும் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கான மரியாதையையும் தவறாக சித்தரிக்கிறது. குழந்தை நலன் என்பது ஒரு பெரிய பொறுப்பான விஷயம். பணம் அல்லது லாபத்தால் உந்துதல் பெறாது" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை படத்தின் தயாரிப்பாளர் நிக்கில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விளக்கமளித்துள்ளார். அதில் "இந்தியாவின் கலாச்சாரம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெரியோர்களால் கற்றுத் தரப்படுகிறது. கலாச்சாரா ரீதியாக விருந்தினரை அவமானப்படுத்தும் நோக்கம் நமக்கு கிடையாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
My Op-Ed in @IndianExpress today about the film #MrsChatterjeeVsNorway. It incorrectly depicts Norway’s belief in family life and our respect for different cultures. Child welfare is a matter of great responsibility, never motivated by payments or profit. #Norwaycares pic.twitter.com/FpVWmdLv5h— Ambassador Hans Jacob Frydenlund (@NorwayAmbIndia) March 17, 2023