Skip to main content

இந்தியாவில் இலவச சேவையை அறிமுகம் செய்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

ott

 

தற்போதைய டிஜிட்டல் உலகில் மிகவும் பிரபலமாக இருப்பது ஓ.டி.டி. புதிய படங்கள் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல், ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் அளவிற்கு உலகம் முழுவதும் வளர்ந்துவிட்டது ஓ.டி.டி. குறிப்பாக இந்த கரோனா லாக்டவுன் சமயத்தில் ஓ.டி.டி நிறுவனங்கள், பல வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது.

 

உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை வைத்திருகும் ஓ.டி.டி நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸ். இந்தியாவில் தற்போது அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களை ஈர்க்க, ஏதேனும் ஒரு வார இறுதியில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது சேவையை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சேவை இந்தியாவிலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இதை அந்நிறுவனத்தின் சீஃப் ப்ரோடக்ட் ஆஃபிசர் கிரெக் பீட்டர்ஸ் கடந்த அக்டோபர் மாதம் உறுதி செய்திருந்தார்.

 

இந்நிலையில், இந்த 'நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீம் பெஸ்ட்' குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். வருகிற டிசம்பர் மாதம் 5 மற்றும் 6 -ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில், யார் வேண்டுமானாலும் தங்களின் மெயில் அல்லது மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்துகொள்ளலாம். மேலும், அவர்களிடம் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் விவரங்கள் கேட்க மாட்டோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஒரு லாகினை உருவாக்கி எந்தச் சாதனத்திலும் பயன்படுத்தலாம் என்றும் படங்கள், சீரிஸ், ஆவணப் படம் என அனைத்தையும் இலவசமாகக் கண்டு களிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொங்கல் பண்டிகை; ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்டேட்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
New update of 'Vidamuyarchi' movie

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த பிறகு சில தினங்களுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘படாஸ் மா...’ - விஜய்யின் லியோ ஓடிடி அப்டேட்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

vijay leo ott update

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. 

 

முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் 7 நாட்களில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் 12 நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் படக்குழு அறிவித்தது. இந்த வெற்றியை பிரம்மாண்டமாக படக்குழு கொண்டாடியது. இதையடுத்து ‘நா ரெடி...’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. 

 

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 24 ஆம் தேதி இந்தியாவிலும், 28 ஆம் தேதி உலகெங்கிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.