Skip to main content

நேற்று விஜய்... இன்று அஜித்... வெளியான அப்டேட்

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் அஜித்தை வைத்து தமிழில் நேர்கொண்ட பார்வை என்றொரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ajithkumar

 

 

இந்த படத்தை தொடர்ந்து அஜித் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறது படக்குழு. போனி கபூர் பல இடங்களில் அதிகாரப்பூர்வமாக இதை தெரிவித்துள்ளார்.

 
இந்நிலையில் இதுவரை இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அஜித்தும் வித்யா பாலனுக்கும் இடையே வரும் டூயட் பாடல் அகலாதே பாடல் நாளை மாலை வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
 

நேற்று விஜய் நடிப்பில் உருவாகும் பிகில் படத்திலிருந்து சிங்கப்பெண்ணே என்றொரு பாடல் வெளியாகியது. இந்நிலையில் அஜித் படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

அஜித் ரசிகர்கள் இன்றி பலருக்கும் யுவன் அஜித் காம்போவில் வெளியாகும் தீம் பாடலுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். பில்லா, மங்காத்தாவை போல் இந்த படத்தில் ஒரு தீம் அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்