Skip to main content

‘நடிகர் சங்கம் பற்றி கேட்டறிந்தார் ஓ.பி.எஸ்’- நாசர் பேட்டி

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

23ஆம் தேதி நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அண்மையில் உத்தரவிட்டிருந்தார் தென்சென்னை மாவட்ட பதிவாளர். ஆனால், இதை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன்பின்னர் தேர்தல் சொன்ன தேதியில் நடைபெற அனுமதி அளித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
 

nasar

 

 

இதையடுத்து, நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சட்டத்திற்கு மேலானவர்கள் எவரும் இல்லை. இறுதி வரை நடிகர் சங்க கட்டிடத்திற்காக போராடுவேன்’ என விஷால் தெரிவித்துள்ளார்.
 

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடனான சந்திப்புக்கு பின் நாசர் பேட்டியளித்தார். அதில், “நடிகர் சங்க தேர்தலுக்காக உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். நடிகர் சங்கம் பற்றி முழுமையாக, அனைத்தையும் துணை முதல்வர் கேட்டறிந்தார். இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் ” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதலமைச்சரைச் சந்தித்த பாண்டவர் அணி! (படங்கள்) 

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்தது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் நிறுத்தி வைத்து நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 20ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிட்டு வெற்றிப் பெற்றது. அதன்படி நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்திக்கு ஆகியோர் வெற்றி பெற்றனர்.  இந்நிலையில், இன்று நடிகர் சங்கத் தேர்தலில் வென்றவர்கள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

 

 

Next Story

நடிகர் சங்க தேர்தலின் வாக்குகளை எண்ணலாமா? அல்லது மறுதேர்தல் நடத்தலாமா? -பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

highcourt chennai


நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் வாக்குகள் எண்ணப்படாத நிலையில் இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மறு தேர்தல் நடத்தலாமா? அல்லது வாக்கை எண்ணலாமா? என்பதை வழக்கின் மனுதாரர்களின் இருதரப்பும் பேசி முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வழக்கில் கடந்த ஆண்டு தேர்தலுக்கு 30 லட்சம் செலவானது. எனவே மறுதேர்தல் சாத்தியமற்றது எனக் கூறிய விஷால் தரப்பு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என வாதிட்டது. தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமாக மறு தேர்தல் நடத்த தயார் என ஏழுமலை தரப்பு வாதம் செய்தது.

 

இந்நிலையில் நடிகர் சங்கதிற்கு மறு தேர்தல் நடத்துவதா? அல்லது நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதா? என நடிகர் விஷால் தரப்பும், ஏழுமலை தரப்பும் செப்டம்பர் 24 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.