Skip to main content

"அனைத்தையும் விட்டுவிட்டு ராணுவத்தில் சேருவேன்" -  பரபரப்பை கிளம்பும் நட்டியின் பதிவு!

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Natarajan Subramaniam support agnipath

 

இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என பாதுகாப்புத்துறை உயரதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நடராஜன் அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பெயரில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்..தேசமே தெய்வம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வரும் இளைஞர்கள் மத்தியில் இவரின் இந்த பதிவு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"சண்டை காட்சியில் சங்கு ஒதுங்கிடுச்சு" -  ‘வெப்’ பட அனுபவம் பகிரும் நட்டி

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Natty Interview

 

'வெப்' படத்தில் நடித்த தன்னுடைய அனுபவங்களை நடிகர் நட்டி நட்ராஜ் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைத்தையுமே முடிவு செய்வது ஸ்கிரிப்ட் தான். அதில் ஒரு அழகான விஷயத்தை இயக்குநர் சொல்லியிருக்கிறார். நாம் செய்யும் விஷயங்களில் எது தேவையோ, அதை இயக்குநர் எடுத்துக்கொள்வார். ஒளிப்பதிவாளராக வேலை செய்துவிட்டு நடிகராக வரும்போது முதல் படத்தில் ஒரு பதட்டம் இருந்தது. இப்போது அது இல்லை. நான் கதை கேட்கும்போது சாதாரண ஒரு மனிதனின் மனநிலையில் இருந்து தான் கேட்பேன். கதையில் என்ன இருக்கிறது என்பது அதிலேயே புரிந்துவிடும். 

 

ஒரு காட்சி எதற்காக இருக்கிறது என்பதை இயக்குநர் தெளிவாக விளக்கிவிடுவதால் நடிக்கும்போது எனக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. சில நோய்களை மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். சில நோய்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். அறுவை சிகிச்சை நிலைக்கு சென்றுவிட வேண்டாம் என்று சொல்வதுதான் இந்தப் படம். படத்தில் சில வன்முறைக் காட்சிகள் இருப்பதற்கு இதுதான் காரணம். ஒவ்வொரு கதைக்களமும் நம்மிடமிருந்து ஒவ்வொரு விஷயத்தை எதிர்பார்க்கும். அதில் இதுவரை என்னுடைய பணியை நான் சரியாகவே செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

 

ஓடிடியின் வருகை என்பது காலத்தின் வளர்ச்சி. அதை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. திரையரங்குகளிலேயே பெரிய ஸ்கிரீன், சிறிய ஸ்கிரீன் என்று காலத்துக்கு ஏற்றவாறு மாறியே வந்திருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் சினிமா மக்களை சென்றடைந்தால் அது எனக்குப் போதும். சினிமாவில் நான் நடிக்கிறேன் என்று சொன்னபோது என்னுடைய நண்பரான இயக்குநர் அனுராக் காஷ்யப் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். நல்ல படங்கள் எது வந்தாலும் அதைப் பார்த்து அவர் பாராட்டுவார். 

 

பேன் இந்தியா படங்கள் இப்போது அதிகம் வருவதால் அனைத்து மொழிகளில் உள்ள நடிகர்களும் மற்ற மொழிகளிலும் நடிக்கின்றனர். இந்த படத்தின் இயக்குநர் மிகவும் ஜாலியான மனிதர். செட்டை எப்போதும் கலகலப்பாகவே அவர் வைத்திருப்பார். கஷ்டப்பட்டு நடித்துவிட்டு வந்து உட்காரும்போது "நம்ம படத்துக்கு எப்போ நடிப்பீங்க?" என்று கேட்பார். படத்தின் சண்டை காட்சிகளில் எல்லாம் சங்கு ஒதுங்கிடுச்சு, அந்த அளவுக்கு பெண்ட் எடுத்துட்டாங்க. ஒளிப்பதிவாளராக இருந்தாலும், நடிகராக இருந்தாலும் நம்முடைய பணியை நாம் சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் வெற்றி. நான் ஒளிப்பதிவாளராக இருக்கும்போதே மக்களுக்கு என்னை அடையாளம் தெரிந்தது. நடிகரானதும் கூடுதலாக தெரிகிறது.
 

 

 

Next Story

பாலிவுட்டில் ஒளிப்பதிவாளர் கோலிவுட்டில் நடிகர் - நட்ராஜ் திரைப் பயணம் 

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

 Cinematographer in Bollywood Actor in Kollywood - Natraj 

 

கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஒளிப்பதிவாளராக உச்சம் தொட்டு அதன்பின் 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலமாக முழு நேர நடிகராக கவனம் ஈர்த்த 'நட்டி' என்கிற நட்ராஜ் தற்போது நடித்துள்ள 'பகாசூரன்' படத்தின் அனுபவம் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பகாசூரன் படத்தில் நீங்கள் நடித்துள்ள கேரக்டர் எப்படிப்பட்ட தாக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது?

 

மோகன் ஜி சொன்ன கதையில் உயிரோட்டம் இருந்தது. இன்றைய தேதியில் செல்போன்களைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அவற்றால் பல நன்மைகள் இருந்தாலும், நம்மையும் மீறி சில செயலிகள் நம்மை பாதிக்கின்றன. இதற்கு வயது வித்தியாசமே கிடையாது. அதில் யார் சிக்கினாலும் அவர்களுடைய வாழ்க்கையே புரட்டிப் போடப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களோடு பேசும்போது அவர்களுடைய வறுமை எவ்வாறு தவறான நபர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது என்பது புரிந்தது. அதை வைத்துப் பணம் பறிக்கிறார்கள் அல்லது தங்களுக்குத் தேவையானவற்றை சாதித்துக் கொள்கிறார்கள். சமுதாயத்தோடு நாம் இணைந்து வாழாமல் இருந்தால் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்.

 

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நீங்கள் பயணித்ததில் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்கள் உண்டா?

 

நிச்சயமாக. இந்த வேலை செய்பவர்களை எளிதில் அடையாளம் காண முடியாது. மக்களை எளிதாக ஏமாற்றும் வகையில் பேசுவார்கள். தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்வார்கள். ஏதாவது ஒரு விஷயத்திற்காக ஏங்குபவர்கள் தான் இவர்களுடைய டார்கெட். முதலில் அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்துவிட்டு பின்பு தங்களுக்குத் தேவையானதை சாதித்துக் கொள்வார்கள். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவற்றையெல்லாம் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருந்தது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்வது தான் 'பகாசூரன்'.

 

ஒளிப்பதிவாளராக இருந்து நடிகரானவர் நீங்கள். இயக்குநராக இருந்து நடிகரானவர் செல்வராகவன். அவரோடு இணைந்து நடிக்கும் அனுபவம் எப்படி இருந்தது?

 

இந்தப் படத்தில் பீமராசுவாக செல்வராகவன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரத்தில் அவ்வளவு எதார்த்தத்தைப் பிரதிபலித்தார். அவருடைய நடிப்பைப் பார்க்கும்போது "இவருக்கு தான் அனைத்து அவார்டுகளும் வரப்போகிறது" என்று இயக்குநரிடம் கூறினேன். வலியை உள்வாங்கி அவர் நடித்த விதம் அற்புதமாக இருந்தது. அதனால்தான் அவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் பெரிய உயரத்தை அடைந்துள்ளனர். அவர் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

 

ஏன் ஒளிப்பதிவாளராக அதிக தமிழ் படங்கள் செய்வதில்லை?

 

நல்ல கதை, நல்ல சம்பளம், தேவையான கருவிகள் என அனைத்தும் சரியாகக் கிடைக்கும் படங்களை ஏற்றுக்கொள்கிறேன். 'புலி' படத்தில் என்னுடைய பணி சவாலாக இருந்தது. அதுபோல் என்னுடைய உழைப்புக்கு தீனி போடும் அனைத்து வாய்ப்புகளையும் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.