Skip to main content

“வாட்சப் ஃபார்வேர்டுகளை நம்பி செல்லப்பிராணிகளை...”- நடிகர் நகுல் வேண்டுகோள்

Published on 01/04/2020 | Edited on 01/04/2020


சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
 

nakul


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாகக் கடந்துவிட்டது. இதில் நூறு பேருக்கும் மேல் குணமடைந்துள்ளனர். இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் நடிகர் நகுல் கரோனா குறித்து பல வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவது வைரலாகி வருகிறது. இந்நிலையில் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மூலம் கரோனா பரவாது என்பதைத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “செல்லப்பிராணிகள் கரோனாவைப் பரப்பாது. நிறைய பேர் தங்கள் செல்லப் பிராணிகளை தவிர்க்கிறார்கள். அவர்கள் எவ்வளவு மனுஷத்தன்மை இல்லாமல் இருக்கிறார்கள்!. வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளை நம்பாதீர்கள். செல்லப்பிராணிகளுக்குத் தண்ணீர் வையுங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்