Skip to main content

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட 'நாட்டு நாட்டு' பாடகர்

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

Naatu Naatu singer Kaala Bhairava aplogises

 

95வது ஆஸ்கர் விழா அண்மையில் நடைபெற்று முடிந்தது. அதில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் விருது வென்றது. ஆஸ்கர் விருதினை இசையமைப்பாளர் கீரவாணியும் பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆஸ்கர் மேடையில் பாடகர்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிபிலிகஞ்ச் பாடினர். அதற்கு அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று பாராட்டினார்கள். 

 

இது தொடர்பாக பாடகர் கால பைரவா தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் , "உங்கள் அனைவருடனும் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆர்.ஆர்.ஆர் படக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் ஆஸ்கர் மேடையில் பாட வாய்ப்பளித்ததற்கும் நான் மிகவும்  நன்றியுள்ளவனாக உணர்கிறேன். இதற்கு முழு காரணமாக இருந்த ராஜமௌலி, நடன இயக்குநர் பிரேம், கார்த்திகேயா, அம்மா" என சில நபர்களை குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவின் கீழ் ரசிகர்கள், நீங்கள் பாடியதற்கு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் பங்களிப்பு இல்லையா... பாடல் எழுதிய சந்திரபோஸ் காரணமாக இல்லையா... என பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் ரசிகர்களின் கமென்டிற்கு பாடகர் கால பைரவா பதிவிட்டுள்ளார். மேலும் அவர்கள் குறிப்பிட்ட பெயர்களை அவர் குறிப்பிடாததற்காக மன்னிப்பு கூறியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , "நாட்டு நாட்டு மற்றும் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரும் காரணம் தான். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்கர் மேடை நிகழ்ச்சிக்கான வாய்ப்பைப் பெறுவதற்கு யார் உதவினார்கள் என்று மட்டுமே நான் குறிப்பிட்டிருந்தேன். மற்றபடி வேறொன்றுமில்லை. நான் குறிப்பிட்டது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

ராஜமௌலி இயக்கியிருந்த இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.  
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் ராஜமெளலி படம் எடுத்த புதிய பரிணாமம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
rajamouli rrr at japan

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில் ஜப்பானில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனால் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்ற ராஜமௌலி, சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு உரையாடினார். பின்பு அவருக்கு 83 வயது மூதாட்டி ஒருவர், 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கினார். அந்த சிறப்பு பரிசு குறித்து நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜமௌலி, “இது விலைமதிப்பில்லாத பரிசு” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கடந்த 21ஆம் தேதி அங்கு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பானிய பெண்கள் நாடகமாக அரங்கேற்றியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் எங்கள் ஆர்.ஆர்.ஆர் படம் இசை நாடகமாக அரங்கேற்றப்பட்டது எனக்கு பெருமை. படத்தைப் போலவே நாடகத்தையும் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய பார்வையாளர்களுக்கு நன்றி. உங்கள் வரவேற்பால் மனம் நெகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டு அந்த நாடகத்தில் நடித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்தார். 

ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் மட்டுமல்லாமல் ஆர்.ஆர்.ஆர் பட இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ள இறைவி பாடல்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
12 year old Navya Umesh sung iraivi album

சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது மாவீரன், ஜெயிலர், ஜவான் மற்றும் லால் சலாம் படங்களின் ஆடியோ லான்ச், எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை இயக்குநரும் நிகழ்வு மேலாளருமான உமேஷ் ஜே குமார் மற்றும் நிகழ்வு மேலாளர் ராகிணி முரளிதரன் ஆகியோரின் மகள் நவ்யா உமேஷ்.

ஏழாம் வகுப்பு படித்து வரக்கூடிய இவர், பாடி நடித்த ‘இறைவி’ பாடல் மகளிர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. வெங்கடேசன் இயக்கியுள்ள இப்பாடலை நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். சமூக தொழில் முனைவோர் தீப்தி வரிகளை எழுதியுள்ளார். ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ‘கட்சி சேரா’ போன்ற வைரல் வீடியோக்களுக்கு நடனம் அமைத்த ‘தி டான்சர்ஸ் கிளப்’ இந்தப் பாடலுக்கான நடனம் அமைத்துள்ளனர். சோனி மியூசிக்கில் மகளிர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்தப் பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.