Skip to main content

'நானே வருவேன்' படத்தின் அப்டேட்டை வெளியிட்ட செல்வராகவன் !

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

Naane Varuven movie update out now

 

கலைப்புலி எஸ் தாணுவுடைய 'வி கிரியேஷன்' தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.  யுவன் இசையமைக்கிறார். செல்வராகவன் இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் வருகிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். முழு வீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

 

இந்நிலையில் நானே வருவேன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளதாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அத்துடன் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதனிடையே நானே வருவேன் படத்திற்கு தனுஷ் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். ஆனால் கதை திரைக்கதை எழுதி நடிக்கும் தனுஷுடன் இணைந்து நடித்து நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்குவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்