Skip to main content

"வட இந்தியாவுல அப்படி இல்ல.. இது தமிழ்நாடு" - மிஷ்கின்

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

mysskin speech at Dinosaurs Audio Launch

 

எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் பிரியா தேவா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டைனோசர்ஸ்'. ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இப்படம் இந்தாண்டு கோடைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் மிஷ்கின், நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர்.

 

அப்போது மிஷ்கின் பேசுகையில், "போனி கபூர் சார் பக்கத்தில் உட்கார்ந்தது ரொம்ப மகிழ்ச்சி. எல்லாரும் பேசி முடிச்ச பிறகு நம்மோடு சேர்ந்து கை தட்டுறார். அப்புறம் டச் அப் பாயில் இருந்து எல்லாரும் பேசுவாங்களா என கேட்டார். வட இந்தியாவுல அப்படி கிடையாதுன்னு நினைக்கிறேன். அங்கு ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோனே என அவுங்க மட்டும் தான் பேசுவாங்க. ஆனா இங்க எல்லாருக்கும் வாய்ப்பும் கொடுப்போம். அது தான் தமிழ்நாடு" என்றார். 

 

மேலும் பல விஷயங்களை பகிர்ந்து மிஷ்கின் மேடையில் அமர்ந்திருந்த அருண் விஜய்யை பற்றி பேசினார். அப்போது, "எல்லாருக்கும் வயசு ஏறிக்கிட்டே போகும். அருண் விஜய்க்கு குறைஞ்சிக்கிட்டே போகுது. பாலாவுடன் பணியாற்றுகிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் பாலா மீண்டும் வரவேண்டும். இந்தியாவின் மிக சிறந்த இயக்குநர் என் பாலா" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்