/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG_0053_2_1.jpg)
சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமாகி அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைகோ உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமான இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் இதுவரை சமூக வலைதளம் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் முதல்முறையாக ட்விட்டர் தளத்தில் தற்போது இணைந்துள்ளார். @DirectorMysskin என்ற பெயரில் இவருடைய ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மிஷ்கின் தற்போது தனது தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் 'பிதா' படத்தை தயாரித்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)