Skip to main content

“உங்களை நம்புகிறோம்”- விஷாலுக்கு எதிராக மிஷ்கினுக்கு ஆதரவு அளித்த தயாரிப்பாளர்...

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

கடந்த 2017ஆம் ஆண்டு விஷால், மிஷ்கின் கூட்டணியில் உருவாகிய படம் துப்பறிவாளன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை லண்டனில் தொடங்கினர். 
 

vishal myskin

 

 

இதன்பின் எந்தவித அறிவிப்பும் இப்படம் குறித்து வெளியாகவில்லை. மிஷ்கினின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான சைக்கோ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

இதனிடையே விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. அதனால் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கப்போவதில்லை, விஷாலே அந்த படத்தை இயக்குகிறார் என்று சொல்லப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி விஷால் இயக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதனுடன் விஷால் தரப்பிலிருந்து மிஷ்கின் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து அறிக்கையும் வெளியானது. அதேபோல மிஷ்கின் விஷாலுக்கு விதித்த 15 நிபந்தனைகளும் இணையத்தில் வெளியானது. 

விஷால் வெளியிட்ட அறிக்கையில், “இனி எந்த தயாரிப்பாளரும் மிஷ்கினுக்கு படம் தயாரிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் வெல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் சார்பில், “மிஷ்கின்  உங்கள் மீதும், உங்கள் கதை மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் ரெடி என்றால் நாங்களும் ரெடி” என்று விஷால் பதிவிட்டிருந்த பதிவில் ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் நான் இல்லை” - விஷால்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Vishal says I am not one to say that I will come to politics and then back off

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே தனது அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஷால். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விஷால், “இனி வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். .

இந்த நிலையில், விஷால் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் இல்லை. சினிமா போன்று அரசியல் கிடையாது. அரசியல் என்பது சமூக சேவை. அது துறை கிடையாது. அரசியலை பொழுதுபோக்காக பார்க்காமல் மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும். எல்லாரும் அரசியல்வாதிகள் தான். 2026 ஆம் ஆண்டில் தேர்தல் வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையில்லை. தற்போது அதிக கட்சிகள் உள்ளன. நல்லது செய்ய முடியும் என்றால் மட்டுமே அரசியலுக்கு வருவேன்” என்று கூறினார். 

Next Story

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி; பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Vijay Sethupathi directed by Mishkin; First look release

 

தமிழ் சினிமாவில் நாயகனாக ஆரம்பித்து இந்தி, தெலுங்கு சினிமாக்களில் வில்லனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாகத் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். மெரி கிறிஸ்துமஸ், விடுதலை இரண்டாம் பாகம் ஆகியவை ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

 

இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘டிரெயின்’ (Train) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி, தன்னுடைய வித்தியாசமான இயக்கத்தால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் மிஷ்கின். இவர்கள் இணைந்து ஒரு படம் உருவாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.