Skip to main content

“இது என்னுடைய முதல் படம்" - மிஸ் இந்தியா அழகி பேட்டி

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

"This is my first film...."- Miss India Interview!

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘DSP’. இந்தப் படத்தின் ஹீரோயினாக, வாஸ்கோடகாமா என்ற போலீஸ் கேரக்டரில் அனுகீர்த்தி நடித்துள்ளார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், இளவரசு, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 2 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று (25/11/2022) இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

 

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், 'DSP' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டார். விழாவில் இயக்குநர் மிஷ்கின், நடிகர் வைபவ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த படத்தின் கதாநாயகி அனுக்ரீத்தி, "எல்லோருக்கும் வணக்கம். நான் அனுகீர்த்தி. இது என்னுடைய முதல் படம் 'DSP'. பொன்ராம் சார் இயக்கத்தில், விஜய்சேதுபதி சார் கூட, ஸ்டோன்பென்ச் தயாரிப்பில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம். கமல்ஹாசன் சார் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டதில் ரொம்ப ரொம்ப சந்தோசம். நீங்கள் இங்கு வந்ததற்கு ரொம்ப நன்றி. டிசம்பர் 2 ஆம் தேதி அன்று இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. எல்லோரும் கண்டிப்பாக பாருங்கள்" என்றார்.   

 

அனுகீர்த்தி, கடந்த 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ரொம்ப எமோஷனலான மொமெண்ட் இது" - அபர்ணா தாஸ்

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

aparna das speech at kavin dada trailer launch event

 

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாடா'. கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்கிறார். 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் டீசர் முன்னதாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

 

இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இதையொட்டி இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. 

 

கதாநாயகி அபர்ணாதாஸ் பேசுகையில், “கதாநாயகியாக நான் நடித்த முதல் தமிழ் படம் இது என்பதால் எனக்கு எமோஷனலாக இருக்கிறது. கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக நின்ற என் இயக்குநர் கணேஷூக்கு நன்றி. என்னை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது கவின்தான். கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமாவில் இது என் சிறந்த தொடக்கமாக இருக்கும்” என்றார்.  

 

நடிகர் கவின் பேசுகையில், ”நான்கு வருடங்களாக ‘டாடா’ படத்திற்காக நாங்கள் திட்டமிட்டோம். இத்தனை வருடங்களும் நாங்கள் இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்றுதான் உழைத்தோம். பிரதீப், பாலு நாங்கள் அனைவருமே கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கைதான் இவ்வளவு தூரம் படத்தைக் கொண்டு வந்துள்ளது. எனக்குத் தெரிந்த பாபு இவ்வளவு மெச்சூர்டான கண்டெண்ட் யோசிப்பானா என்பது தெரியாது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்தப் படத்தை ஒத்துக் கொண்டதற்கு நன்றி" என்றார். 

 

 

Next Story

இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் சொன்ன குட்டிக்கதை

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

 A short story told by Bhagyaraj at the audio launch event

 

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் - அல் முராட் & சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை ரத்தன் லிங்கா எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர். 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலை பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். 'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது வாழ்வில் பிரச்சனைகள் வருவது பற்றி ஒரு குட்டிக் கதையும் சொன்னார். இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதில், “படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும்போது பல்வேறு சிரமங்கள், இடைஞ்சல்களைச் சந்தித்துத்தான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்துகொண்டு தான் இருக்கும். அதையும் தாண்டித்தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. 

 

மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டிவிட்டு திருடப் போவார்கள். ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படிப் பலநாள் எதுவும் கிடைக்கவில்லை. அன்று வேண்டும்போது, இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள். அன்றும் ஒன்றுமே கிடைக்காதுபோகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள். ஆனால், மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்துவிட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்தக் கல்லைத் தூக்கிக் கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான்.

 

அதே நேரத்தில் கண் வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார். தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே! நான் கல்லை கோயிலைத் தாண்டித்தானே வீசினேன்! என்றான். எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா? என்றான். அதற்கு விநாயகர், நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றுதான் நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார். அதுபோல இடையூறுகள் எப்படியென்றாலும் வாழ்வில் வந்தே தீரும்.” என்று கூறினார்.