Skip to main content

'மை டியர் பூதம்' கெட்டப்பில் பிரபு தேவா; இணையத்தில் கவனம் ஈர்க்கும் மோஷன் போஸ்டர்

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

my dear bootham movie mostion poster released

 

சினிமா துறையில் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முகத் திறமைகொண்ட பிரபு தேவா, தமிழில் ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

 

ad

 

இப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபு தேவா அடுத்ததாக இயக்குநர் என் ராகவன் இயக்கும் மைடியர் பூதம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

 

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மைடியர் பூதம் படத்தின் மோஷன் போஸ்ட்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 90ஸ்  கிட்ஸ்களின் ஆதர்ச நாயகனான மைடியர் பூதம் கெட்டப்பில் நடிகர் பிரபு தேவா தோன்றியுள்ளார். வித்தியாசமான இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

https://www.youtube.com/watch?v=b0GoYhr-vY0

 

 

சார்ந்த செய்திகள்