
ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி, அஷ்னா ஜவேரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் 'மை3'. ராஜேஷ் எம் இயக்கியுள்ள இந்த சீரிஸ் ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்வதாக உருவாகியுள்ளது. இசைப் பணிகளை கணேசன் கவனிக்கிறார். ஹாட்ஸ்டாரில் இந்த சீரியஸ் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை பிக்பாஸ் ஹவுஸ் நிகழ்ச்சியில் ஹன்ஷிகா, முகேன் ராவ் இணைந்து அறிவித்தார்கள்.