Skip to main content

பிரபாஸின் அடுத்த படத்திற்கு தமிழ் இசையமைப்பாளர்! 

Published on 20/10/2020 | Edited on 20/10/2020
radhe syam

 

 

‘சாஹோ' படத்தை தொடர்ந்து பிரபாஸ், ராதா கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரபாஸின் 20ஆவது படமான இந்த படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 

 

இதில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. தற்போது ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,  'பிரபாஸ் 20' படக்குழு ஷூட்டிங்கை தொடங்கியுள்ளது.

 

இனி வெளிநாட்டு படப்பிடிப்பு அனுமதிக்கு நாட்களாகும் என்பதால், இங்கே அரங்குகளை உருவாக்கி ஷூட்டிங்கை தொடங்கியுள்ளது படக்குழு. பிரம்மாண்டமான மருத்துவனை, ஐரோப்பாவின் வீதிகள், பெரிய கப்பல் உள்ளிட்ட அரங்குகள் அமைத்தது படக்குழு. 

 

இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தமாகியுள்ளார். டியர் காம்ரேட் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஜஸ்டினின் பாடல்களுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ராதே ஷ்யாம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

RadheShyam

 

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த மார்ச் மாதம் திரையில் வெளியான படம் 'ராதே ஷ்யாம்'. இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருந்தார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளிவந்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக முதல் நாளிலேயே 79 கோடி ரூபாய் வசூல் செய்தது.

 

இந்நிலையில்  'ராதே ஷ்யாம்' படம் ஏப்ரல்-1 அன்று ஓடிடியில் வெளியாகும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல்-1 அன்று தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளிலும் வெளியாகிறது. இதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து ஒரு புதிய ட்ரைலரையும் அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது.

 

 

 

Next Story

'ராதே ஷ்யாம்' படத்தால் நடந்த விபரீதம் - பிரபாஸ் ரசிகர் தற்கொலை

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

radhe shyam movie review prabhas fans suicide

 

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் வெளியான படம் 'ராதே ஷ்யாம்'.  இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகிய இப்படத்திற்கு இந்திய முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 11ஆம் தேதி வெளியாகி இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் இப்படம் தெலுங்கைத் தாண்டி மற்ற மொழிகளில் வரவேற்பைப் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் பிரபாஸ் ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த முத்யால ரவி தேஜா (24) என்பவர் ராதே ஷ்யாம் படத்தை பார்த்திருக்கிறார். அதன் பின் படம் தொடர்பாக வெளிவந்த கலவையான விமர்சனங்கள் குறித்து தனது தாய் மற்றும் நண்பர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து  கவலையில் இருந்த முத்யால ரவி தேஜா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.