Skip to main content

பல வருடங்கள் கழித்து மீண்டும் உருவாகும் முந்தானை முடிச்சு!!!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020
munthanai mudichu

 

 

கடந்த 1983ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படம் முந்தானை முடிச்சு. இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.

 

தமிழில் மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

 

பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கின்றார். மேலும், ஜே.எஸ்.பி. சதீஷ் இந்த படத்தை தயாரிக்கின்றார். அடுத்த வருடம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மூளை இல்லாத ஒரு ஆள் இந்த படத்தை எடுக்க முடியாது' - ஆரி

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

'A man without a brain cannot take this movie' - Actor Aari

 

இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘3.6.9’. இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி ஜி எஸ் தயாரித்து நடித்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் 24 கேமராக்களை கொண்டு சுமார் 450 தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த திரைப்படத்தை 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படமாக்கி படக்குழு மாபெரும் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆரி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

 


இவ்விழாவில் பேசிய  நடிகர் ஆரி, "தனிப்பட்ட முறையில் எனக்கும், இந்த படத்திற்கும் தொடர்பு இருக்கு. 3.6.9 என்னுடைய கார் நம்பர்.  என் காருக்கு இந்த நம்பர் எடுத்த போது இதன் விளக்கம் எனக்கு தெரியாது. அதன் பிறகு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இயக்குநர் ஆனந்த் எப்பவுமே அவரு வேலை செய்யும் படங்களுக்கு வந்துருங்கனு மட்டும் சொல்லுவார். மத்தபடி எந்த தகவலும் சொல்ல மாட்டார். அவரிடம் தொந்தரவு பண்ணி கேட்ட போதுதான் நான் தயாரித்து இருக்கிறேன் வந்துருங்கன்னு சொன்னார். 'என்னய்யா இவ்ளோ நாள் என்னை வச்சி படம் எடுக்காம சத்தமே இல்லாம இரண்டு படம் தயாரிச்சிருக்கன்னு திருப்பி கேட்டேன். நம்ம நண்பர்கள் சேர்ந்து பண்ணினார்கள் நாம உதவி பண்ணிருக்கோம் வாங்கன்னு சொன்னார். அப்புறம் என்ன கதை, ட்ரைலர்-லாம் போடுவீங்களா எதையும் பாக்காம எதை பத்தி பேசுறது என்று திருப்பி நான் தொந்தரவு பண்ணி கேட்டேன். அப்புறம் முன்னோட்டம் மாறி ஒரு டீசர் போடுவோம் என்று சொன்னார்'. பின்பு டீசர் போட்டுக் காண்பித்தார்கள். மூன்று முறை போட்டுக் காண்பித்தார்கள். அப்போதே தெரிந்து விட்டது, இந்த முன்னோட்டத்துக்கு பின்னாடி பெரிய வெள்ளோட்டம் இருக்கு. நிறைய விஷயங்களை வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார் என்று புரிந்தது.

 

இப்படத்தை பற்றி பேச வேண்டியது இருக்கும் போது, படத்தை பற்றி ஒரு முழு விவரங்களோடு பத்திரிக்கை செய்தி குறிப்பு அனுப்பினார். நான் ஏன் வரணும் என்று திருப்பி கேட்டபோது, நீங்க ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் இந்த படமும்  கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அது தொடர்பாக நீங்கள் சம்மந்தப்பட்டுள்ளீர்கள் அதற்காகவும் நீங்கள் வரலாம் என்று பேசினார். இயக்குநர் பேசுகையில் நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால் கதையை பற்றி அதிகம் சொல்லவில்லை. 'திருத்துவதற்கு கதை வரவில்லை சிந்திக்கிற மாதிரி கதை வச்சிருக்கேன்' என்று சுருக்கமாக தன் உரையை முடித்து கொண்டார்.

 

'தல இருக்கும் போது வால் ஆட கூடாது' அதனால் அப்பா நிறைய பேசுவார். படக்குழு அனைவரும் அழகாக சுருக்கமாக பேசி முடித்துவிட்டனர். இயக்குநர் அளவாக பேசணும் என்று பயிற்சி கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் பேசிய அனைவரும் தங்களது அப்பா, அம்மாவை நினைவு கூர்ந்து தன் உழைப்பால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம் என நேர்த்தியாக இங்கு பதிவிட்டார்கள். சினிமா திட்டுபவனையும் வாழ்த்தும் பாராட்டுபவனையும் வாழ வைக்கும். இன்றைக்கு ஒரு படத்தை விமர்சித்து யூ ட்யூபில் பதிவிட்டு அதன் மூலம் சம்பாதிப்பவர்கள் அனைவரும் சினிமாவை வைத்து தான் வியாபாரம் செய்து சம்பாதிக்கிறார்கள். அந்த வகையில் சினிமா எப்போதுமே 'வாழவைக்கிறவனையும் வாழ விடும் வாழ கெடுக்கிறவனையும் வாழ வைக்கும்' அது தான் சினிமாவை நம்பி இருக்கிற ஒரு பெரிய தொழிலுக்கான மரியாதை.

 

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் இவ்ளோ வசூலித்தது என்று பேசுகிறோம். ஆனால் எங்கோ ஒரு தெருக்கோடியில் இருந்து தனக்கான ஒரு மேடையை அமைத்துக்கிட்டு ஒரு சில கோடிகளில் பல கோடி மக்களுக்கு தன்னை அடையாளப்படுத்தனும் என்று ஒரு பெரும் முயற்சியோடு பணியாற்றி உள்ளார்கள். 21 வருடத்திற்கு பிறகு பாக்யராஜ் சார் கதாநாயகனாக நடிக்கிறார் என்று சொன்னார்கள். கதாநாயகனாக அவர் திரும்ப வந்திருக்கலாம். ஆனால் கதைக்கும் திரைக்கதைக்கும் என்றைக்கும் ஒரே நாயகன் தமிழ் சினிமாவில் அவர் மட்டும் தான். இன்னொரு 21 ஆண்டுகள் கழித்தும் எல்லாருக்கும் அவர் தான் முன்னோடியாக இருப்பார். இன்றைக்கு என்னிடம் வந்து ஒரு அடல்ட் காமெடி படம் பண்ணுவீர்களா என்று கேட்டார்கள். பாக்யராஜ் சார் படம் மாதிரி பண்ணுவீங்கன்னா சொல்லுங்க தாராளமா நம்பி உங்களோடு வருகிறேன் என்று சொன்னேன். ஒரு அடல்ட் காமெடி படத்தை நேர்த்தியாக குடும்பங்கள் விரசம் இல்லாமல் பார்த்து ரசிக்கிற அளவிற்கு ஒரு படம் கொடுத்த இயக்குநர் தான் பாக்யராஜ். அந்த ஜானரில் அதிகம் படம் வெளிவருவதில்லை. வியாபாரத்திற்காக நிறைய படங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை. உலகத்தினுடைய அத்தனை சாராம்சங்களும் 3,6,9 என்கிற நம்பரில்தான் நடக்கும், இதற்குள்ளே தான் நம்ம வாழ்க்கை அடங்கியிருக்கு. இதனை கதைக்களமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் என்று சொல்லும் போது 'மூளைகாரர் என்று சொல்வதை விட மூளை இல்லாத ஒரு ஆள் இந்த படத்தை எடுக்க முடியாது என்று சொல்லலாம்' என்று பேசினார்.  

 


 

Next Story

இந்தி வேணான்னு சொல்லல, ஆனால்... - ஆரி பேச்சு

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

Not to mention Hindi, but ... - Actor Aari speech

 

இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘3.6.9’. இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி ஜி எஸ் தயாரித்து நடித்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் 24 கேமராக்களை கொண்டு சுமார் 450 தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த திரைப்படத்தை 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படமாக்கி படக்குழு மாபெரும் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆரி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

 


இவ்விழாவில் பேசிய  நடிகர் ஆரி, "பான் இந்தியா படங்கள் அதற்கான திட்டமிடல்களோடு உருவாகும். 'பீஸ்ட்' படம் தமிழ் பிராந்திய மொழி படம். அதை தாண்டி பக்கத்தில் எவ்ளோ தூரம் போகுமோ அங்க போய் படத்தை பாத்துக்கலாம். பழனிக்கு ஏன் மொட்டை அடிக்க வரவில்லை என்று கேட்டால் அவர் திருப்பதிக்கு போறவராக இருப்பார். அவர் பழனிக்கு வரணும்னு அவசியம் இல்லை. நம்ம திருப்பதிக்கு போகும் என்று எண்ணினால் தான் திருப்பதிக்கு போய் மொட்டை அடிக்கணும். அதனால் நாம எடுக்கிற படம் வியாபார தளத்தை தாண்டி தமிழ் சினிமாவிற்கு எப்போதுமே ஒரு அடையாளமான ஒரு படம். நம்ம தமிழ் சினிமாவில் தான் 'ஒத்த செருப்பு' படத்தில் ஒரு ஆள் நடித்து உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தோம்.

 

அந்த காலத்தில் இருந்து இன்று வரைக்கும் நூறு சினிமாக்களில் சிறந்த படம் எனும் லிஸ்டில் நம்ம ஆளுங்க எடுத்த நாயகன் படம் இடம்பெற்று இருக்கிறது. ஒரு படம் சரியாக போகவில்லை என்பதால் தமிழ் சினிமாவே சரியில்லை என்று சொல்வதை விட தமிழ் சினிமா இன்னும் சரியான தரமான படங்களை கொடுக்க நம்ம முயற்சி பண்ணனும் என்கிற விவாதம் தான் தேவை. அதை தவிர தமிழ் சினிமாவில் இருக்கிற அத்தனை படங்களும் அத்தனை இயக்குநர்களும் மட்டமானவர்கள், படமே எடுக்க தெரியாதவர்கள் மாதிரி ஒரு பிம்பத்தை சமீப காலங்களில் ஒரு விவாதம் நடைபெறுகிறது. அந்த விவாதம் மூலமாக சினிமாவை விமர்சித்து பணம் சம்பாதிக்கிறார்கள். அது எந்த வகையிலும் சினிமாவை வளர்த்து எடுக்காது. சினிமாவில் நல்லது பேசினாலும் காசு, கெட்டது பேசினாலும் காசு அப்படிங்கிறதுல ஒரு விவாதம் ஆகிவிட்டது. நாம சாதனையாளராக மாறுவதை விட நம் படைப்பு சாதனையானதாக இருக்க வேண்டும் என்பது தான் இங்க முக்கியம்.

 

பெரிய படங்களை போல் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் இப்படத்தில் கிடையாது. இவர்களுடைய மிக பெரிய சொத்து இவர்களின் தன்னம்பிக்கை மட்டும் தான். அந்த நம்பிக்கையில் தான் பத்திரிக்கையாளர்களிடம் வெறும் நாற்பது வினாடிகளுக்கு ஒரு டீசர் போட்டு காண்பித்து தன்னம்பிக்கையோடு பேசுகிறார்கள். வார்த்தை தான் ஒரு இடத்துல நம்பிக்கையாக படமா கொடுக்குது. அடுத்து படத்தின் ட்ரைலர், முன்னோட்டம் ரீலீஸ் செய்யும் போது இன்னும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கான இது ஒரு சின்ன முன்னோட்ட விழா. அதை தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறேன். இப்படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கு நடிகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

மாபெரும் மனித உழைப்பு இப்படத்திற்கு பின்னாடி இருக்கிறது. படத்தின் மொத்த நீளம் 81 நிமிடம். அந்த 81 நிமிடமும் தவம் இருந்தால் மட்டுமே அதை சரியா நேர்த்தியாக பண்ண முடியும். ஒரு ஆள் தவறு செய்தாலும் முடிஞ்சிது. நான் நேசிக்கும் சினிமாவிற்கு திருப்பி செய்யும் விஷயம் இந்த புது முயற்சி. புது முயற்சிக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும். இந்த ஒரு சின்ன முயற்சி தான் நாளை ஒரு பெரிய முயற்சியாக பார்க்கப்படணும். எவ்ளோ பெரிய பான் இந்தியா படமாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு வந்தா தமிழ் தான் பேசுது. எந்த மொழிக்கும் எந்த படம் போனாலும் அந்த மொழி பேசினால் தான் காசு.  நாங்க இங்க காசு கட்டுகிறது  நாங்க வாழ்வதற்கான வரியை உங்களிடம் கொடுக்கிறோம்.

 

அதனால் நாங்க என்ன பேசணும், எந்த மொழிய பயிற்றுவிக்கணும் , எந்த மொழியை வளர்த்தெடுக்கணும் என்பது நம்மளுடைய உரிமை. உலகத்துக்கெல்லாம் அவரவர்கள் மொழி அவர்களுக்கானது. தமிழ்நாட்டுடைய தாய் மொழி தமிழ் நமக்கானது. எனவே இணைப்பு மொழி நமக்கு தமிழ் தான். இந்தி வேணாம்னு சொல்லல, தமிழுக்கு நோ சொல்லுவதுதான் வேணாம் என்கிறோம். இந்தி உங்களுடைய மொழி அதை நீங்களே வச்சிக்கோங்க, தமிழ் என் தாய் மொழி அது எப்போதும் என் அடையாளம்" என பேசினார்.