Skip to main content

சில தருணங்களில் எனக்கே என் மீது வெறுப்பு வந்தது - எம்.எஸ். பாஸ்கர் 

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

 MS Bhaskar at Erumbhu Trailer Launch

 

இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம்.எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி.வி.எஸ் புரொடக்‌ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார். 

 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு எம்.எஸ். பாஸ்கர் பேசுகையில், ''வெள்ளித்திரை படத்திற்கு பிறகு இனிய நண்பரான சார்லியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக சார்லியும் நானும் விவாதிப்போம். இதனை இயக்குநரும் அனுமதிப்பார். விசயம் நன்றாக இருந்தால், இயக்குநர் சுரேஷ் அதனை இணைத்துக் கொள்வார். என்னைப் பொறுத்தவரை எப்போதும் சுறுசுறுப்பாகவே பணியாற்றும் இயக்குநர் சுரேஷ் தான் எறும்பு.

 

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது என்னுடைய கண் முன்னால் கந்து வட்டியின் கொடுமை தாங்காமல் தீக்குளித்த ஒரு குடும்பத்தினரின் புகைப்படம் வந்து சென்றது. வட்டி வாங்குவது வேதனையான விசயம். மிக கடுமையாக பேச வேண்டிய வேடம் இது. இதனால் சில தருணங்களில் எனக்கே என் மீது வெறுப்பு வந்தது. அந்த இரண்டு குழந்தைகள் வட்டி கட்டுவதற்காக உழைக்கும் உழைப்பு எப்படி இருந்தது என்றால்... மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்களே... அப்படி இருந்தது.

 

அந்த வகையில் ‘எறும்பு’ நல்ல கருத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதிகபட்சம் யாரும் கடன் வாங்காதீர்கள். ஏனெனில் கடன் என்பது மிக மோசமான விசயம். அப்படி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த கடனை அடைப்பதற்கான வருவாயை ஆண்டவன் நமக்கு அருள வேண்டும். இந்தப் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் 'அரண்மனை 4'  !

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
aranmanai 4 ott release date

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர்.சியின் "அரண்மனை 4" திரைப்படத்தை  ஜூன் 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர்.சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கமர்ஷியல் என்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில்  மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார். அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தைக் கொண்டுள்ளது, அரண்மனை 4 அசாமிய நாட்டுப்புறக் கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு ஆவியை அடிப்படையாகக் கொண்டது. இது பாக் எனப்படும் நீர் ஆவியைப் பற்றியது, இது தண்ணீரில் வசிக்கும் மற்றும் அது தொடர்பு கொள்ளும் எந்த மனிதனின் வடிவத்தையும்  எடுக்க முடியும். இப்படம் ரசிகர்களை நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஹாரர் கலந்து காமெடியுடன் அனைவரும் ரசிக்கும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

திருமணமும் திரைப்படம் வெளியீடும் - குஷியில் உமாபதி ராமையா!

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
pithala mathi movie

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள "பித்தல மாத்தி" திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக் வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும்..

இந்த கால காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.ஜூன் மாதம் 11ம் தேதி திரு உமாபதி ராமையா வின் திருமணம் நடைபெற உள்ளது. இதே மாதம் 14ம் தேதி வெளியாகும் இந்த பித்தளை மாத்தி திரைப்படம் வெற்றி பெற்று அவர் மென்மேலும் உயர வாழ்த்துகிறோம் .