Skip to main content

“திரௌபதி அருளுடன் ருத்ர பிரபாகரனின் அடுத்த ஆட்டம்” - இயக்குனர் மோகன்.ஜி அறிவிப்பு!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

draupathi

 

'பழைய வண்ணாரப்பேட்டை' என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன். இவருடைய இரண்டாவது படமான 'திரௌபதி' படத்தின் மூலம் நல்ல பிரபலமானார்.

 

'திரௌபதி' குறைந்த அளவிலான செலவில் எடுக்கப்பட்டு, நல்ல வசூலை வாரிக் குவித்தது. ஒரு பக்கம் சர்ச்சை மறு பக்கம் ஆதரவு என்று படம் வெளியான சமயத்தில் நல்ல விளம்பரமானது.

 

இந்நிலையில், 'திரௌபதி' இயக்குனர் மீண்டும் 'திரௌபதி' படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்டுடன் இணைந்து புதிய பட வேலைகளைத் துவங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதை உறுதி செய்யும் வகையில் முதற்கட்டமாக கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியின் புதிய தோற்றம் ஒன்றை சமீபத்தில் இயக்குனர் மோகன் வெளியிட்டார். மேலும், ருத்ர பிரபாகரனின் ஆட்டம் தொடரும் என்று ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். விஜயதசமி அன்று இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியரசு தலைவர் தேர்தல்... முர்மு முன்னிலை!

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Presidential election... Murmu lead!

 

இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் நாட்டின் 15- வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களம் கண்டுள்ளனர். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

 

இந்நிலையில் பிற்பகல் நிலவரப்படி பாஜக அணியின் திரௌபதி முர்மு பெற்ற வாக்குகள் மதிப்பு 3,78,00 என உள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா வாக்கு மதிப்பு 1,45,600 என உள்ளது. திரௌபதி முர்முவுக்கு 540 எம்பிக்களும், யஷ்வந்த் சின்ஹா 208 எம்பிக்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த வாக்கு எண்ணிக்கையில் 15 எம்.பிக்களின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திரௌபதி முர்மு முன்னிலையில் உள்ளார்.

 

 

Next Story

"ஆதரவா பேசுறவங்க எல்லாம்..." கவுதம் வாசுதேவ் மேனனை விமர்சித்த திரௌபதி இயக்குனர் மோகன்.ஜி!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

mohan

 


2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தில் வரும் கார்த்திக், ஜெஸ்ஸி, அவர்களுக்குள்ளே நடக்கும் தொலைபேசி உரையாடல் வைத்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்தை கெளதம் மேனன் இயக்கிய வெளியிட்டிருந்தார். 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 
 


இந்த நிலையில் திரௌபதி இயக்குனர் மோகன்.ஜி கவுதம் மேனன் எடுத்த குறும்படத்தை விமர்சனம் செத்துள்ளார். அதில், நிறைய இளைஞர்கள் உங்கள் படத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்களிடம் விஷத்தைக் கலக்க முயற்சி செய்யாதீர்கள் என்றும், இந்த ஆதரவா பேசுற போரளிகள் எதிர்காலத்தில் பெரிய தியாகிகள்.. கவரிமான் ராஜா வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.. என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சமீபத்தில் இந்தக் குறும்படம் குறித்து கவுதம் மேனன் பேசும் போது, இந்தப் படம் எடுத்தது நீங்களும் உங்கள் முன்னாள் காதலியை அழைத்துப் பேசுங்கள் என்று சொல்வதற்காக அல்ல. இது ஜெஸ்ஸி - கார்த்திக்கின் கதை. அவ்வளவுதான். எனக்கு உண்மையில் கலவையான விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை. ஒரு சிலர்தான் இப்படத்தை வசை பாடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.