Skip to main content

யாருப்பா இது நம்ம யோகிபாபுவா? அடையாளமே தெரியாம மாறியிருக்காரே!

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

Miss Maggie  First look Teaser

 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. குழுவில் பின்னால் நிற்கும் ஒருவராகவும், சண்டைக்காட்சிகளில் அடி வாங்கும் ஸ்டண்ட்மேனாகவும் பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்; ‘அடேய், பன்னி மூஞ்சி வாயா’ என்றெல்லாம் நேரடியாகவே சினிமாவில் உடலமைப்பு வைத்து கிண்டல் அடிக்கப்பட்டவர்; பிற்காலத்தில் பிரபல நடிகையான நயன்தாராவுடன் டூயட் பாடுமளவுக்கு வளர்ந்து நின்றவர். இவர் கதையின் நாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் தேசியவிருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினி, விஜய் என முன்னணி நட்சத்திரங்களுடன் எல்லாம் நடித்திருக்கிறார். இவரது வளர்ச்சியை வைத்து படங்களின் நாயகனை வைத்து புரொமோசன் செய்யாமல் இவரை வைத்து போஸ்டர் வெளியிட்ட போது, தைரியமாக அந்தப் படத்தில் நான் காமெடி கேரக்டர் மட்டும் தான் செய்கிறேன். ஹீரோ வேற ஒருவர் என்பதை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர். 

 

இவரது நடிப்பில் வெளியான டீசர் ஒன்று சமூகவலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. ஆங்கிலோ இந்தியன் பாட்டியாக மாறி நிற்கிற யோகிபாபு அச்சு அசலாக அப்படியே இருக்கிறார். படத்தின் கதாபாத்திரம் குறித்த விவரமெல்லாம் போகப்போகத்தான் தெரியவர வாய்ப்பிருக்கிறது. இப்படத்திற்கு ‘மிஸ் மேகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை லதா ஆர்.மணியரசு இயக்கியிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
yogi babu new movie update

இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகிபாபு நடிப்பில் ஒரு படம் உருவாகும் வருகிறது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், யோகி பாபு நாயகனாக நடிக்க லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஆர் ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. 

இப்படம் குறித்து யோகி பாபு கூறுகையில், “சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள் . அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாகும். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்" என்றார். 

Next Story

விஷாலுக்கு யோகிபாபு பரிசு

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

yogi babu gifted murugal idol to vishal

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் 25 நாளை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. வினோத் குமார் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் கடந்து வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த படத்தின் இந்தி பதிப்பை வெளியிடுவதற்கு தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக ஒரு பரபரப்பு புகாரை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் சிபிஐ தணிக்கை குழு அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது. 

 

இந்த படத்தை அடுத்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. 

 

அப்போது எம்.குமாரசக்கனாபுரம் ஊராட்சி மக்கள் விஷாலை சந்தித்து, குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக சொன்னார்கள். உடனே விஷால், பொதுமக்கள் முழுமையாகப் பயன்பெறும் வகையில் 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர். 

 

இந்த நிலையில் யோகிபாபு தனக்கு முருகன் சிலை ஒன்றை பரிசளித்துள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நடந்த படப்பிடிப்பின் போது யோகிபாபு தனக்கு அளித்துள்ளதாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கடவுளே பரிசைக் கொடுத்து அனுப்பியது போல் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.