/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mirugam 2.jpg)
கடந்த 2007ஆம் ஆண்டு சாமி இயக்கத்தில் ஆதி நடித்து வெளியான படம் மிருகம். இந்த படம் அப்போது நல்ல வரவேற்பை பெற்றது. எய்ட்ஸ் நோயை மையப்படுத்தி இப்படம் கிராம பின்னணியில் உருவானது. இந்த படத்தில் பத்மபிரியா நாயகியாக நடித்தார். ஷூட்டிங்கின்போது இவருக்கும் இயக்குனருக்கும் இடையே நடைபெற்ற மோதல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாகவும் அந்த படத்தில் ஆர்.கே. சுரேஷ் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து பேசியுள்ள நடிகர் ஆர்.கே. சுரேஷ், “மிருகம் படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிப்பது பெருமையாக உள்ளது. திரைக்கதை முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும். இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)