Skip to main content

“இருண்ட பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும்”-பிரபல நடிகர் பேச்சு!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

m b jordan


கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர் போலீஸாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவும், ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான அரசின் அமைப்பை எதிர்த்து மக்களின் போராட்டம் தீவிரமாகியுள்ளது. இதையொட்டி #blacklivesmatter என்ற ஹாஷ்டேக் பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
 


இதனிடையே கறுப்பின மக்களுக்கு எதிரான அமைப்பை எதிர்த்து நடைபெற்ற மக்களின் போராட்டத்தில் ஹாலிவுட் நடிகரான ஜோர்டான் கலந்துகொண்டு பேசுகையில், "நீங்கள் பாலின சமத்துவத்தை 50/50 என்ற விகிதத்தில் பேணுவோம் என இந்த வருடம் உறுதி கொடுத்தீர்கள். கறுப்பின மக்களை வேலைக்கு எடுப்பது பற்றிய உறுதி எங்கே? நாங்கள் கதை சொல்லும் விதத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று நனைக்கிறீர்களா? எங்கள் இருண்ட பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். கறுப்பர்களைப் பற்றிய, கறுப்பர்கள் எடுக்கும் படைப்புகள் வர வேண்டும்" என்று ஜோர்டன் பேசியுள்ளார்.

மேலும், “ஒடுக்கப்பட்டவர்களுக்கு அறிவு கிடைக்கக்கூடாது என்பதற்காக அரசாங்கமும், அடக்குமுறை செய்பவர்களும் எந்தத் தூரத்துக்கும் செல்வார்கள் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை: குற்றவாளிக்கு தண்டனை அறிவித்த நீதிமன்றம்... வரவேற்ற குடும்பத்தினர்!  

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

DEREK CHAUVIN

 

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், மினியாபோலிஸ் நகரப் போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவும், ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனமும் தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக மினியாபோலிஸ் நகர நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, மினியாபோலிஸ் நகர நிர்வாகம் ஜார்ஜ் ப்ளாய்ட்டுக்கு இழப்பீடாக 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கவும் ஒப்புக்கொண்டது. இது இந்திய மதிப்பில் 196 கோடியாகும். இதற்கிடையே ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டது குறித்த வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட டெரிக் சாவில் என்ற பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியை நீதிமன்றம் ஏற்கனவே குற்றவாளியாக அறிவித்திருந்தது.

 

இந்தநிலையில் ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில், டெரிக் சாவிலுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறுமாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "இந்தச் சிறை தண்டனை, உங்கள் பதவி மீதான நம்பிக்கை மற்றும் அதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததையும், ஜார்ஜ் ப்ளாய்ட்டுக்கு நீங்கள் காட்டிய கொடூரத்தையும் அடிப்படையாக கொண்டது" என நீதிபதி டெரிக் சாவிலிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பை ஜார்ஜ் ப்ளாய்ட்டின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். 

 

 

Next Story

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது!  

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

darnella frazier

 

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், மினியாபோலிஸ் நகர போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரபலங்களும் ஆதரவளித்ததோடு, ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்கு கண்டனமும் தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.

 

ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்படுவதை டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண் வீடியோ எடுத்தார். அப்போது அவருக்கு 17 வயது. டார்னெல்லா ஃபிரேசியர் எடுத்த அந்த வீடியோவே உலகம் முழுவதும் பரவி, அமெரிக்காவில் போராட்டம் வெடித்ததற்கும், உலக முழுவதும் அதற்கு ஆதரவு எழுவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.

 

இந்தநிலையில், டார்னெல்லா ஃபிரேசியருக்கு சிறப்பு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளில் வழங்கப்படும் உயரிய விருதாக புலிட்சர் விருது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.