கடந்த 2002ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் மெட்டி ஒலி. இந்த பிரபலமான தொடரில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரித்திகா. அதனை தொடர்ந்து கலசம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது கல்யாண பரிசு என்னும் சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisment

srithika

இவர் டிவி தொடர்களில் நடிப்பது மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு, மதுரை டூ தேனி, வேங்கை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisment

இந்நிலையில் 33 வயதான ஸ்ரித்திகா தற்போது சனீஷ் என்பவரை மணந்துள்ளார். இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடந்து முடிந்தது. திருமண வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஸ்ரித்திகாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.