Marakuma Nenjam - Malina - Interview

திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படக் குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். கலகலப்பான பேட்டியில் நம்மிடையே பல்வேறு சுவாரசியமான விசயங்களை பகிர்ந்து கொண்டனர்.

Advertisment

இப்படத்தில் நடித்த மலினா பேசியதாவது “இந்த படத்தை ஒரு ஆசிர்வாதம்னு சொல்லலாம், அல்லது ஒரு மேஜிக் என் வாழ்க்கையில் நடந்ததுன்னு கூட சொல்லலாம். ஸ்கூல் சப்ஜெக்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும். எதேச்சையாக எனக்கே அப்படியான ஒரு கதையில் நடிக்க வாய்ப்பு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது”.

Advertisment

“கதை சொல்லும் போதே நிறையா விசயங்களை என்னோட பள்ளி வாழ்க்கையோட கனெக்ட் பண்ணிக் கொள்ள முடிந்தது. படப்பிடிப்பு நேரத்திலும் படப்பிடிப்பு தளத்தில் எப்பவும் ஜாலியா இருப்பாங்க, வெளியில எல்லாரையும் கலாய்க்கிற தீனா, ராகுல் என்னைய யாரும் கலாய்க்காம பாதுகாத்து வச்சுப்பாங்க, அதுவே ஒரு மாதிரியான குட் பீல் தான். எனக்கு தமிழ் நல்லா தெரியும், படத்தின் தெலுங்கு வெர்சனுக்கு தெலுங்கு டீச்சர் ஒருவரை நியமித்து அவர் மூலமாக கற்றுக்கொண்டேன்” என்றார்.