/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/122_38.jpg)
கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை என்ற இடத்தில் கடந்த ( 30.07.2024) நள்ளிரவு 1 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ள சூரல்மலை என்ற இடத்திலும் அதிகாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இவ்விரு நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்றுடன் நான்காவது நாளாக நீடித்து வரும் நிலையில், தற்போது வரை 344 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கி 220க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-Website(1)_17.jpg)
இந்த சம்பவத்திற்கு தமிழ் திரைப்பிரபலங்களில் சிலர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில் விக்ரம் ரூ.20 லட்சம் மற்றும் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம், கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர். மேலும் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “சாதி, மதம் , இனம், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம், கீழ்சாதி, மேல்சாதி, உயர்ந்தவன், தாழ்ந்தவன், சினிமா, அரசியல், ஆட்சியாளர்கள், அடிவருடிகள், சந்தர்பவாதிகள், பந்தா, பகட்டுதனம் எதுவும் இல்லை. இயற்கை... இயற்கையேதான். கனப்பொழிதில்...நொடிப் பொழுதில் அடித்து செல்லப்பட்டு உடல்கள் துண்டாக்கப்பட்டு, கட்டிடங்கள், ஊர்கள், கிராமங்கள், குடும்பம் குடும்பமாய் மண்ணோடு புதைந்தது வயநாடு. இன்னொருபுறம் ராக்கெட்களும், ஏவுகணைகளும், குண்டுகளும் வீசி நகரங்களை அழித்து நாசமாக்கும் மனித பிண்டங்கள், ஆட்சியாளர்கள். மனிதம் கேள்விக் குறியில் இருக்கிறது. உயிரிழந்த வயநாடு மாமனிதர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று கதறி அழுதுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)