'அசுரன்' படத்தின் மூலம் தமிழில் பிரபலமான மஞ்சு வாரியர் தற்போது அஜித்தின் 'துணிவு' படத்தில் நடிக்கிறார். இதனிடையே மஞ்சு வாரியர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஆயிஷா'. இப்படத்தை அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்குகிறார். இப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் சார்பாக ஜக்காரியா தயாரிக்கிறார்.
இந்நிலையில் 'ஆயிஷா' படத்தின் கண்ணிலு கண்ணிலு பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. ஜெயச்சந்திரன் இசையில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளம், ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏழு மொழிகளில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.