Published on 02/03/2022 | Edited on 02/03/2022

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிலர் 'வலிமை' படத்தில் இடம்பெற்றுள்ள 'அம்மா' பாடல் மறைந்த ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் வெளியானது என்றும், படம் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியானது என்றும் அஜித்தின் 'வலிமை' படத்துடன் ஜெயலலிதாவை தொடர்புப்படுத்தி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயாராகிறார் என்றே நினைக்கின்றேன் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, "நடிகர் அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை" எனக் கூறியுள்ளார்.