mamannan update mari selvaraj shared a photo

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ்தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ், "தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும். இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும்" என பேசினார்.

Advertisment

உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 1ஆம் தேதி வெளியானது. மேலும் ஜூன் மாதம் படம் வெளியாகும் என அதில் படக்குழு தெரிவித்தது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு, ஏ.ஆர்.ரஹ்மான், யுகபாரதி உள்ளிட்டோர் இருக்கின்றனர். அந்த பதிவில், "இசைப்புயலுடன் பிரவேசித்த வைகைபுயல்" எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு ஒரு பாடல் பாடியுள்ளார். அப்புகைப்படத்தை பார்க்கையில் படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கியுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. இப்படத்தில் வடிவேலு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.