Skip to main content

விஜய்சேதுபதி பட முதல் சிங்கிள் பாடல் வெளியாகிறது!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

v dzbzd

 

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இது, விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும். இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.

 

மேலும், இப்படத்தின் தலைப்பு பிரச்சனையும் தீர்ந்துவிட்டதால், விரைவில் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் பாடல்கள் வெளியாகவுள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி கடந்த மாதம் அறிவித்தார். இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமனிதன்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சீனு ராமசாமி 

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

maamanithan movie update out now

 

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இது, விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும். இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது. 

 

ad

 

இதையடுத்து, படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளதால் விரைவில்  'மாமனிதன்' படம் வெளியாகும் என இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்திருந்தார். சமீபத்தில் வெளியான படத்தின் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் சீனுராமசாமி ‘மாமனிதன்’ படம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

அதில், “37 நாட்களில் உருவான 'மாமனிதன்' திரைப்படம். எடிட்டர் ஸ்ரீகாந்த் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்றப் பணிகளும் நிறைவடைந்து திரைத்தொட காத்திருக்கிறது. அடுத்த வாரம் சென்சார் போகிறது மாமனிதன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Next Story

இரண்டு தேசிய விருது பெற்ற நடிகை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

kpac lalitha admitted in hospital

 

பிரபல மலையாள நடிகை கே.பி.சி.ஏ லலிதா உடல்நலக்குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான, பரமசிவம், கிரீடம் மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே, உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தில் கே.பி.சி.ஏ லலிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்பு அவரது உடல்நிலையில் மோசமடைந்ததால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நடிகை கே.பி.சி.ஏ லலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. 

 

இவர் 1991 மற்றும் 2001 ஆம் ஆண்டிற்கான சிறந்த துணை நடிகைக்கான  இரண்டு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.